மனநலம் பாதித்த பெண் பலாத்காரம்; மர்ம நபருக்கு போலீசார் வலைவீச்சு. - TPVA 2021

Breaking

Blogroll

BANNER 728X90

Saturday, July 17, 2021

மனநலம் பாதித்த பெண் பலாத்காரம்; மர்ம நபருக்கு போலீசார் வலைவீச்சு.


கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 28 வயது இளம்பெண். சற்று மனநலம் பாதிக்கப்பட்ட இவர் மாற்றுத்திறனாளியும் ஆவார். இவர் அந்த பகுதியில் உள்ள காட்டுப்பகுதிக்கு ஆடுகளை மேய்க்க செல்வது வழக்கம்.

கடந்த சில மாதத்திற்கு முன்பு இவர் ஆடுகளை மேய்க்க சென்ற போது, மர்ம நபர் ஒருவர் அந்த இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. 

இந்தநிலையில் இவரது உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டு வந்தது. மேலும், அவ்வப்போது உடல் நலக்குறைவும் அவருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த இளம்பெண்ணின் பெற்றோர், அவரை பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது, அவர் 5 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. 

இதுகுறித்து அவரின் பெற்றோர் சிங்காரப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து, மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து, கர்ப்பிணியாக்கிய மர்ம நபரை வலைவீசி தேடி வருகிறார்.

No comments:

Post a Comment