பொம்மிடி இரட்டை கொலை வழக்கு 3 பேர் கைது; 3 பேர் தலை மறைவு. - TPVA 2021

Breaking

Blogroll

BANNER 728X90

Friday, July 16, 2021

பொம்மிடி இரட்டை கொலை வழக்கு 3 பேர் கைது; 3 பேர் தலை மறைவு.


பொம்மிடி அருகே உள்ள பில் பருத்தி கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். விவசாயி. இவரது மனைவி சுலக்சனா. ஓய்வு பெற்ற ஆசிரியர். இவர்களுக்கு இரண்டு மகளும், ஒரு மகனும் உள்ளனர். மகன் தனியார் கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார்.

மகன் பெற்றோர்களை விட்டுவிட்டு தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் இன்று அதிகாலை கிருஷ்ணனும், அவரது மனைவி மனைவியும் வீட்டு வாசல் முன்பு கழுத்து அறுபட்டு கடந்த 12ஆம் தேதி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டனர்.

இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், நகைக்காக, அவர்கள் கொலை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. சந்தேகத்தின்பேரில், அதே கிராமத்தை சேர்ந்த 3 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, ஊரடங்கில் வேலை இல்லாததால், பணத்துக்காக தம்பதியை அவர்கள் கொலை செய்தது தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீசார், இந்த சம்பவத்தில் தொடர்புடைய அதிமுக தகவல் தொழில் நுட்ப அணியை சேர்ந்த வேலவன் என்பவர் உள்ளிட்ட மேலும் 3 பேரை தேடி வருகின்றனர். 

No comments:

Post a Comment