ஆடி 1; ஒகேனக்கல் செல்ல தடை பொதுமக்கள் ஏமாற்றம். - TPVA 2021

Breaking

Blogroll

BANNER 728X90

Friday, July 16, 2021

ஆடி 1; ஒகேனக்கல் செல்ல தடை பொதுமக்கள் ஏமாற்றம்.


இன்று ஆடிமாதம் முதல் நாள்.  ஏராளமான சுற்றுலாப்பயணிகள்  பொதுமக்கள் குறிப்பாக புதுமண தம்பதியினர் தருமபுரி மாவட்டம் ஓகேனக்கல் காவிரியாற்றில் புனித நீராடி, புத்தாடை உடுத்தி அங்குள்ள காவிரி அம்மனை வழிபடுவது வழக்கம்.  இந்த ஆண்டு கோவிட் சூழல் காரணமாக சுற்றுலாப்பயணிகளின்றி வெறிச்சோடி காணப்படுகிறது ஒகேனக்கல்.  பிரதான அருவி, சினி அருவி, ஐந்தருவி பகுதிகளில் மக்கள் நடமாட்டமின்றி அருவிகளின் இரச்சல் சத்தம் மட்டுமே கேட்கிறது. 


இந்நிலையில் கர்நாடக, கேரள காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் கர்நாடக அணைகளான கிருஷ்ணராஜசாகர், கபிணி அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது.  இதன் காரணமாக கடந்த 15ந்தேதி கர்நாடக அணைகளிலிருந்து வினாடிக்கு 6400 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது.  இது அன்று மாலை வாக்கில் வினாடிக்கு 14 ஆயிரம் கன அடியாக தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது.  நேற்று(16.07.21) கபிணி அணையிலிருந்து வினாடிக்கு 18 ஆயிரம் கனஅடி தண்ணீரும், கிருஷ்ணராஜசாகர் அணையிலிருந்து வினாடிக்கு 2426 கன அடி தண்ணீரும் காவியாற்றில் திறந்துவிடப்பட்டது. கடந்த 15ந் தேதி கர்நாடக அணைகளிலிருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் இன்று  தமிழக எல்லையான பிலிகுண்டுலுவை வந்தடைந்தது.  அங்கு மத்திய நீர் ஆணைய அதிகாரிகள் காவிரியாற்றில் வரும் தண்ணீரின் அளவை அளவீடு செய்து தொடந்து கண்காணித்து வருகின்றனர்.

இன்றய நிலவரப்படி ஒகேனக்கல் காவியாற்றில் வினாடிக்கு தண்ணீர் வரத்து 5 ஆயிரம் கன அடிக்கு மேல் உயர்ந்துள்ளது.  இது மேலும் படிப்படியாக உயரக்கூடும் என்று மத்திய நீர் ஆணைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆடி மாதம் என்றாலே காவியாறு பெருக்கெடுத்து ஓடும் மாதம். இந்த ஆண்டு காவியாறு பெருக்கெடுத்து ஓடுவதை கோவிட் சூழல் காரணமாக சுற்றுலாப்பயணிகள் நேரில் காண முடியுமோ என்னவோ? ஆனால் தமிழக மக்களும், விவசாயிகளும் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

 தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் செல்லும் அனைத்து சாலைகளிலும் மாவட்ட நிர்வாகத்தின் இந்த உத்தரவின் பேரில் பென்னாகரம் துணை காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் ஆங்காங்கே சாலை சந்திப்புகளில் சோதனை சாவடி அமைத்து தீவிர வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர்

மேற்படி ஒகேனக்கலுக்கு செல்லும் அனைத்துப் பேருந்துகளும் தடைசெய்யப்பட்டு சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்காதமாறு பார்வையிட்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment