தொப்பூர் - மேட்டூர் நெடுஞ்சாலையை சீரமைக்க 13.62 கோடி நிதி ஒதுக்கீடு. - TPVA 2021

Breaking

Blogroll

BANNER 728X90

Wednesday, July 21, 2021

தொப்பூர் - மேட்டூர் நெடுஞ்சாலையை சீரமைக்க 13.62 கோடி நிதி ஒதுக்கீடு.

தொப்பூர் - மேட்டூர் இடையே மோசமான நிலையில் உள்ள தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்க மத்திய அரசு ரூபாய் 13.62 கோடி நிதி ஒப்புதல் தருமபுரி எம்.பி.தகவல் 

தருமபுரி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட  தொப்பூர் -  பவானி தேசிய நெடுஞ்சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளதால் அந்த வழியில் செல்லும் இரண்டுசக்கரவாகனங்கள்  மற்றும் நான்கு சக்கர வாகனத்தில் செல்வோர்  அடிக்கடி விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நிலை ஏற்பட்டுவருகிறது. . இந்த சாலையை பயன்படுத்த மிகவும் சிரமத்திற்கு உள்ளாகிவருவதாக பொது மக்கள் தொடா்ந்து  தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர்  செந்தில்குமார் அவர்களுக்கு கோரிக்கை வைத்து வந்தனா்.


இதனையடுத்து தருமபுரி எம்.பி. செந்தில்குமார்  சென்ற மாதம் பளுதடைந்த சாலைகளை ஆய்வு செய்தார்.   நேற்று ஜூலை 20ஆம் தேதி தேசிய நெடுஞ்சாலைத்துறை (NHAI) ஆணையத்தின் தலைவர் அவர்களை  நேரடியாக சந்தித்து உடனடியாக இந்த சாலையை சீரமைக்க வேண்டும்  என்றும் மேலும் இந்த சாலையை நான்கு வழிச்சாலையாக மேம்படுத்தி தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதனை ஏற்றுக் கொண்ட மத்திய நெடுஞ்சாலைத்துறை ரூபாய் 13.62 கோடிக்கான நிதியினை மாநில நெடுஞ்சாலை துறைக்கு அனுப்பி இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது . 


இதனை அறிந்த அப்பகுதி பகுதி மக்கள் தங்களது நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றி  தந்த தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில் குமார் அவர்களுக்கு  நன்றியை தெரிவித்தனர்.

No comments:

Post a Comment