நாட்டு துப்பாக்கி தயாரித்தவர் உட்பட 11 பேர் கைது. - TPVA 2021

Breaking

Blogroll

BANNER 728X90

Wednesday, July 21, 2021

நாட்டு துப்பாக்கி தயாரித்தவர் உட்பட 11 பேர் கைது.

மாரண்டஹள்ளியில், நாட்டு துப்பாக்கி தயாரித்து விற்பனை செய்தவர் உட்பட,  11 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


பாலக்கோடு அடுத்த மாரண்டஹள்ளி, பஞ்சப்பள்ளி பகுதிகளில்  அனுமதியின்றி நாட்டுதுப்பாக்கி வைத்துள்ளவர்களை கைது செய்ய வேண்டும் என  தருமபுரி மாவட்ட எஸ்.பி., கலைசெல்வன் உத்திரவின்படி  நேற்று மாரண்டஹள்ளி  நான்கு ரோட்டில் போலீசார் வாகன தனிக்கையில் ஈடுப்பட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக  பல்சர் வண்டியில் வந்தவரை நிறுத்தி சோதனை செய்த போது.   வன விலங்குகளை வேட்டையாடுவதற்க்காக நாட்டு துப்பாக்கி கொண்டு சென்றது தெரியவந்தது. இதனையடுத்து  மேலும் அவரிடம் விசாரணை செய்த போது.  அவர் கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்த கடூர் கிராமத்தை சேர்ந்த சங்கர்(33). அவரது தந்தை  எல்லப்பன்(69). இருவரும் வீட்டில் நாட்டு துப்பாக்கிகள் தயாரித்து  விற்பனை செய்து வந்துள்ளனர். 


இதனையடுத்து மாரண்டஹள்ளி  இன்ஸ்பெக்டர் ஜாபர்உசேன், சப்–இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் ஆகியோர் தலைமையில் போலீசார்    யார் யாருக்கு நாட்டு துப்பாக்கி விற்பனை செய்தார்கள் என விசாரணை செய்தனர். இதில், மாரண்டஹள்ளியை சேர்ந்த ரஜினி,41. சீரியம்பட்டியை சேர்ந்த சக்திவேல்,40.  கிருஷ்ணன்,52.  கரகூரை சேர்ந்த முல்லேசன், 26.மல்லப்பன்,50.அன்பு,32,சொக்கன்,45.  உள்ளிட்ட, 11 பேர் அனுமதியின்றி நாட்டு துப்பாக்கி வைத்திருந்ததாக  கைது செய்து  அவர்களிடமிருந்த, 11 நாட்டு துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 11 பேரையும் கொரோனா பறிசோதனை செய்யப்பட்ட பிறகு அரூர் கிளைசிறையில் அடைத்தனர்.

No comments:

Post a Comment