செய்தியாளர் மொரப்பூர் கமலக்கண்ணன்.
மொரப்பூர் ஊராட்சி ஒன்றியம் தாசிரஹள்ளி ஊராட்சியில் இன்று கொரோனா தடுப்பூசி முகாம் இரண்டாம் கட்டமாக நடைபெற்றது இதில் கொரோனா தடுப்பூசி பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டது. அனைவரும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், அடிக்கடி சோப்பு போட்டு கைகளை கழுவ வேண்டும், சேணிடேசர் பயன்படுத்த வேண்டும், முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியை தாசிரஹள்ளி பஞ்சாயத்து தலைவர் திரு. தமிழ்ச்செல்வி ரங்கநாதன் அவர்கள் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். உடன் ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர், பஞ்சாயத்து செயலர் ராம்தாஸ், பொன்னரசு, தியாகராஜன், சங்கேதி, சேட்டு மணி, அரவிந்தன் ஆகியோர் உடன் இருந்தனர்.
No comments:
Post a Comment