19 வயது இளைஞர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு. - TPVA 2021

Breaking

Blogroll

BANNER 728X90

Wednesday, July 28, 2021

19 வயது இளைஞர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு.

தருமபுரி மாவட்டம் மொரப்பூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியான வீரராகவபுரம் கிராமத்தை சேர்ந்த கிஷோர்(19) என்ற நபர் அதே பகுதியை சேர்ந்த சிவகாமி(70) என்ற மூதாட்டியை கொலை செய்தார்.


இதைத்தொடர்ந்து மொரப்பூர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.மஞ்சுளா அவர்கள் விசாரணை மேற்கொண்டு மேற்கண்ட குற்றவாளி கிஷோரை(19) கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தருமபுரி மாவட்ட சிறையில் அடைத்தார்.மேற்படி குற்றவாளி கிஷோரை குண்டர் தடுப்பு காவலில் அடைக்க மொரப்பூர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.மஞ்சுளா அவர்களின் அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சி. கலைச்செல்வன்.IPS., அவர்கள் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு பரிந்துரை செய்ததன் பேரில் மாவட்ட ஆட்சியர் திருமதி.திவ்யதர்ஷினி.IAS., அவர்கள் வீரராகவ புரத்தைச் சேர்ந்த கிஷோர்(19) என்பவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment