இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களுக்கான உடல் தகுதி தேர்வு நடைபெற்று வருகிறது. - TPVA 2021

Breaking

Blogroll

BANNER 728X90

Wednesday, July 28, 2021

இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களுக்கான உடல் தகுதி தேர்வு நடைபெற்று வருகிறது.

26.07.2021 முதல் 2020-ஆம் ஆண்டிற்கான இரண்டாம் நிலை காவலர், சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் போன்ற பணியிடங்களுக்கான உடல் தகுதி தேர்வு காலை 06.00 மணி முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

கடந்த 13.12.2020 அன்று பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்ற நபர்களுக்கான உடற்தகுதி தேர்வானது நேற்று 26.07.2021 முதல் 05.08.2021 வரை நடைபெற உள்ளது. தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கான உடற்தகுதி தேர்வு தருமபுரி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் காலை 06.00 மணி முதல் கொரோனா காரணம் கருதி நாளொன்றுக்கு 500 பேர் வீதம் அனுமதிக்கப்பட்டு தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இரண்டாம் கட்டத் தேர்வில் கலந்து கொள்ள அனுமதிக்கப் படுகிறது. 

இந்த தேர்வானது சேலம் சரக காவல்துறை துணைத் தலைவர் திருமதி.மகேஸ்வரி.IPS , மற்றும் வேலூர் சிறை துறை துணைத் தலைவர் திருமதி.கே.ஜெயபாரதி.IPS., ஆகியோர் முன்னிலையில் தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சி.கலைச்செல்வன்.IPS., அவர்கள் தலைமையில் நடைபெற்றுவருகிறது.

No comments:

Post a Comment