தருமபுரி மாவட்டத்தில் 2021-22 ஆம் நிதியாண்டில் வங்கிகளில் ரூ.6305.12 கோடி கடன் வழங்க இலக்கு. - TPVA 2021

Breaking

Blogroll

BANNER 728X90

Friday, July 23, 2021

தருமபுரி மாவட்டத்தில் 2021-22 ஆம் நிதியாண்டில் வங்கிகளில் ரூ.6305.12 கோடி கடன் வழங்க இலக்கு.


தருமபுரி மாவட்டத்தில் 2021-22 ஆம் நிதியாண்டில் வங்கிகளில் ரூ.6305.12 கோடி
கடன் வழங்க இலக்கு - தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் 2021-22 ஆம் ஆண்டிற்கான கடன் திட்ட அறிக்கையை வெளியிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர்திருமதி.ச.திவ்யதர்சினி,இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 2021-22 ஆம் ஆண்டிற்கான
கடன் திட்ட அறிக்கையை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி, இ.ஆ.ப., அவர்கள் வெளியிட்டார். பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி,இ.ஆ.ப., அவர்கள் பேசியதாவது: 

கடன் தருமபுரி மாவட்டத்தில் 2021-22 ஆம் நிதியாண்டில் வங்கிகள் ரூ.6,305 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் முன்னோடி வங்கியான இந்தியன் வங்கி 2021-22 ஆம் ஆண்டு கடன் திட்ட அறிக்கையை மத்திய மாநில அரசுகளின் திட்டங்களை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு துறைகளுக்கு வங்கிகள் வழங்க ஏதுவாக இந்த கடன் திட்ட அறிக்கை வடிவமைக்கப்பட்டுள்ளது. 

இக்கடன் திட்ட அறிக்கையின்படி விவசாய துறைக்கு ரூ.4 ஆயிரத்து 497 கோடி தொகையும், தொழில் துறைக்கு ரூ.792 கோடி கடன் தொகையும், கல்விக் கடன் வீட்டு வசதி கடன் மற்றும் இதர கடனாக ரூ.1,016 கோடி தொகையும் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, வங்கியாளர்கள் கடன் திட்டத்தை திட்டமிட்டபடி செயல்படுத்தி, நிர்ணயிக்கப்பட்ட அனைத்து இலக்கையும் எட்ட வேண்டும். அனைத்து அரசுத்துறைகள் மூலம் வழங்கப்படும் மானிய கடன் திட்டங்களையும் விரைவில் செயல்படுத்திட வங்கியாளர்களும், அரசு அலுவலர்களும் முனைப்புடன் செயல்பட வேண்டும்  என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சி,இ.ஆ.ப., அவர்கள் பேசினார்.

 
இந்நிகழ்வின் போது கூடுதல் ஆட்சியர்/திட்ட இயக்குனர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மரு.வைத்தியநாதன்,இ.ஆ.ப., இந்தியன் வங்கியின் மண்டல மேலாளர் திரு.பழனி, கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் திரு.ராமதாஸ், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் திரு.கண்ணன், நபார்டு வங்கியின் மாவட்ட வளர்ச்சி மேலாளர் திரு.பிரவீன், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் திரு.அசோகன், அரசு அலுவலர்கள், வங்கியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 


No comments:

Post a Comment