காவேரி ஆற்றில் 36ஆயிரம் கன அடியாக உயரும் என எதிர்பார்ப்பு. - TPVA 2021

Breaking

Blogroll

BANNER 728X90

Friday, July 23, 2021

காவேரி ஆற்றில் 36ஆயிரம் கன அடியாக உயரும் என எதிர்பார்ப்பு.

கர்நாடகா அணைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட 36 ஆயிரம் கன அடி நீர் தமிழக எல்லைக்கு வந்துசேரும் என எதிர்பார்ப்பு - தற்போது காவிரி ஆற்றில் நீர்வரத்து 8 ஆயிரம் கனஅடியாக நீடிப்பு   . 
கர்நாடக, கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளிலும் மழை பெய்து வருவதால் கர்நாடக அணைகளான கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பால் அணைகள் முழு கொள்ளளவை எட்டி தருவாயில் அணைகளின் பாதுகாப்பு கருதி தமிழகத்திற்கு வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு அதிகபடியாக வெளியேற்றப்பட்டு வருகிறது.  


கிருஷ்ணராஜசார்ஜர் மற்றும் கபினி ஆகிய இரு அணைகளிலிருந்து தமிழகத்திற்கு கடந்த இரு தினங்களுக்கு முன்பு 32,000 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டதை தொடர்ந்து 36 ஆயிரம் கன அடியக அதிகரித்து வெளியேற்றப்பட்டது. இந்த நீரானது தமிழக எல்லையான பிலிகுண்டுவிற்கு இரண்டு நாட்களில் வந்தடையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று மாலை நேரத்திற்குள் வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று 8  ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து தற்போது அதே அளவு நீடித்து  8 ஆயிரம் கனஅடியாக உள்ளது. கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட 36 ஆயிரம் கனஅடி உபரி நீரானது இன்று மாலைக்குள் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவிற்கு வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயரும், டெல்டா பாசன விவசாயிகளும் பயனடைய வாய்ப்புள்ளது.

No comments:

Post a Comment