தியாகி சுப்பிரமணிய சிவா அவர்களின் 96ஆவது நினைவு தினம்; தலைவர்கள் மரியாதை. - TPVA 2021

Breaking

Blogroll

BANNER 728X90

Thursday, July 22, 2021

தியாகி சுப்பிரமணிய சிவா அவர்களின் 96ஆவது நினைவு தினம்; தலைவர்கள் மரியாதை.

சுதந்திர போராட்ட தியாகி சுப்பிரமணிய சிவா அவர்களின் 96ஆவது நினைவு தினத்தையொட்டி  தருமபுரி மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி நினைவிடத்தில் மலர் தூவி மாியாதை.


சுதந்திர போராட்ட வீரர் தியாகி சுப்பிரமணிய சிவாவின் 96 ஆவது நினைவு தினம் இன்று   ஜீலை 23 தேதி  அனுசரிக்கப்படுகிறது.   வ.உ.சிதம்பரனாரின் நண்பா் சுப்பிரமணிய சிவா  சுதந்திர போராட்டத்தின் போது ஆங்கில அரசு எதிராக போராடியதால் சிறையில் அடைக்கப்பட்டார் .சிறையில் தொழுநோய் ஏற்பட்டு  விடுதலையானார். பின் பாரத மாத கோவில் அமைக்க நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டார். தனது  இறுதிக்காலத்தில் தருமபுரி மாவட்டம்  பாப்பாரப்பட்டியில் அமைந்துள்ள பாரதபுரம் பகுதியில்  1925ம் ஆண்டு மறைந்தர். பாப்பாரப்பட்டியில் அவரின்  நினைவாக  தமிழக அரசு மணிமண்டபமாக அமைத்தது.  இன்று அவரது நினைவிடத்தில் தருமபுரி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி  தியாகி சுப்பிரமணிய சிவாவின் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

 இந்நிகழ்ச்சியில்  முன்னாள் அமைச்சரும் பாலக்கோடு சட்டப்பேரவை உறுப்பினா் கே.பி.அன்பழகன் பென்னாகரம் சட்டப்பேரவை உறுப்பினா் ஜி.கே.மணி. . தர்மபுரி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ் பி வெங்கடேஸ்வரன். பாப்பிரெட்டிப்பட்டி சட்டப்பேரவை உறுப்பினர் கோவிந்தசாமி.அரூர். சட்டப்பேரவை உறுப்பினர் சம்பத்குமார். உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள்.அரசியல் கட்சித் தலைவர்கள் கலந்துகொண்டு சுப்பிரமணிய சிவாவின் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

No comments:

Post a Comment