மக்கள் பணியை அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும், வள்ளலாரின் விவேகம் அறக்கட்டளை. - TPVA 2021

Breaking

Blogroll

BANNER 728X90

Thursday, July 22, 2021

மக்கள் பணியை அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும், வள்ளலாரின் விவேகம் அறக்கட்டளை.

வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்ற சொல்லின் படி தினமும் பசியால் வாடும் நூற்றுக்கணக்கான மக்களின் பசி போக்கும் பணியில் ஈடுபட்டு வரும் ஓசூர் வள்ளலாரின் விவேகம் அறக்கட்டளை அமைப்பின் தலைவர் திருமதி. வித்யா கணேஷ் அவர்கள், அறக்கட்டளை சார்பாக இரண்டு முக்கிய திட்டங்களை அறிமுகப்படுத்தினார். இது பற்றி அவர் கூறும்போது ஆன்மீக செயல்பாடுகளை மையமாக கொண்ட நாளிதழ் தொடங்குவது, இரண்டாவது வள்ளலாரின் சேவா வங்கி இந்த திட்டங்களுக்கான முன்னெடுப்பு பணிகள் தற்போது துவங்கப்பட்ட சிறப்பாக நடைபெறுகிறது.

மேலும் அறக்கட்டளையின் சார்பில் இந்த திட்டங்களுக்கான தனி கமிட்டி அமைத்து செயல்பாடுகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த இரண்டு திட்டங்களும் 2022 தை மாதம் முதல் பொதுமக்களுக்கு கிடைக்கும் படி பணிகள் நடைபெற்று வருகிறது. 

மேலும் வள்ளலாரின் விவேகம் அறக்கட்டளை, நிர்வாகிகளை மாற்றி அமைக்கவும் புதிதாக இணைந்துள்ள உறுப்பினர்களை அறிமுகப்படுத்தும் நிகழ்வும் அன்று நடைபெறும் என  அறக்கட்டளை தலைவர்  திருமதி ஸ்ரீவித்யா கணேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment