தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் வட்டாட்சியர் அலுவலகத்தில் திடீர் என ஆய்வு. - TPVA 2021

Breaking

Blogroll

BANNER 728X90

Thursday, July 22, 2021

தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் வட்டாட்சியர் அலுவலகத்தில் திடீர் என ஆய்வு.

தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் சூளகிரி வட்டாட்சியர் அலுவலகத்தில் திடீர் என ஆய்வு.

சூளகிரி செய்தியாளர் நாகராஜ்.

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள பொதுசேவை மையத்தை மாநில தகவல்தொழில் நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அவர்கள் திடீரென ஆய்வு மேற்க்கொண்டார்.

சூளகிரி வட்டாச்சியர் அலுவலகத்தில் தினந்தோறும் 100க்கும் அதிகமான பொதுமக்கள் ஆதார் உள்ளிட்ட அரசு சம்மந்தப்பட்ட சான்றிதழ்களை பெற  விண்ணப்பித்து பெற்று செல்லும் நிலையில் அமைச்சர் மனோ தங்கராஜ் பார்வையிட்டு தினந்தோறும் பொதுமக்கள் வருகை உள்ளிட்ட விவரங்களை கேட்டறிந்தார். அரணு

சான்றிதழ்கள் கோரி விண்ணப்பித்திருந்த மூன்று பேருக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் அவர்கள் சான்றிதழ் வழங்கினார்.

இந்த ஆய்வின்போது சூளகிரியை அடுத்த காளிங்காவரம் ஊராட்சியில் உள்ள கிராமங்களில் செல்போன் டவர் இல்லாததால் மாணவ மாணவிகள் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க முடியாமங் அவதிபடுவதால் டவர்  அமைக்க கோரிக்கை மனுவினை காளிங்காவரம் ஊராட்சி மன்ற தலைவர் மனு அளித்தார் .அதனை தொடர்ந்து  மருதாண்டப்பள்ளியில் மக்கள் கணினி மையத்தை அமைத்து தர கோரியும் அமைச்சரிடம் மனு அளிக்கப்பட்டது.

இந்த ஆய்வின் போது கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் பர்கூர்,ஒசூர் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றிருந்தனர்


No comments:

Post a Comment