மாவட்டம் நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றியம் அதியமான்கோட்டை - அதியமான் கோட்டத்தில் மத்திய அரசின் ADPI திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் திருமதி.திவ்யதர்ஷினி IAS அவர்கள் தலைமையில் இன்று காலை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை தர்மபுரி மாவட்ட கலெக்டர் மற்றும் முன்னாள் எம்எல்ஏ தடங்கம் பெ சுப்பிரமணி ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர்.இதில் மாற்றுத்திறனாளிகள் பலர் கலந்து கொண்டு தங்களுக்கான உபகரணங்களை பெற்றுக் கொண்டு இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற்றனர். இந்த நிகழ்ச்சியில் திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் தருமபுரி கிழக்கு மாவட்ட கழக பொறுப்பாளர் திரு.தடங்கம்.பெ. சுப்ரமணி Ex.MLA , தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மரு.DNV.S.செந்தில்குமார் MP திமுக நல்லம்பள்ளி கிழக்கு ஒன்றிய செயலாளர் AS சண்முகம், ஊராட்சி மன்ற தலைவர்கள் திரு.கலைச்செல்வன் , மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Saturday, July 24, 2021
New
ADPI திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் தொடங்கிவைத்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment