பெண் குழந்தைகள் கல்வி பணி சூழல் குறித்த கலந்தாய்வுக் கூட்டம். - TPVA 2021

Breaking

Blogroll

BANNER 728X90

Saturday, July 24, 2021

பெண் குழந்தைகள் கல்வி பணி சூழல் குறித்த கலந்தாய்வுக் கூட்டம்.

தொண்டு நிறுவனங்கள் சார்பில் பெண் குழந்தைகள் கல்வி பணி சூழல் குறித்த கலந்தாய்வுக் கூட்டம்.
பெண் குழந்தைகள் கல்வி மற்றும் வளரிளம் பெண்களின் கண்ணியமான பணி சூழல் குறித்த ஒன்றிய அளவிலான கலந்தாய்வுக் கூட்டம் பென்னாகரத்தில் நடைபெற்றது.

 பென்னாகரம் விநாயகா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி கூட்ட அரங்கில் இன்று சனிக்கிழமை காலை நடைபெற்ற கலந்தாய்வு நிகழ்ச்சிக்கு திருப்பூர் மக்கள் அமைப்பு மாநில அமைப்பாளர் எஸ் எம் பிரித்விராஜா தலைமை தாங்கினார்.

தர்மபுரி ரியல் பவுண்டேஷன் இயக்குனர் கே பி செந்தில் ராஜா வரவேற்புரை ஆற்றினார்.

 கலந்தாய்வு கூட்டத்தின் நோக்கம் குறித்து டி பி எப் மாநில ஒருங்கிணைப்பாளர் டி.மெல்வின் கருத்துரை வழங்கினார்.

கலந்தாய்வு கூட்டத்தில் பெண் குழந்தைகள் கல்வி மற்றும் வளரிளம் பெண்களின் கண்ணியமான பணி சூழல் குறித்தும்,பள்ளி குழந்தைகள் இடைநிற்றல்,குழந்தை திருமணம் மற்றும் குழந்தை தொழிலாளர்கள் மற்றும் பஞ்சாலைகளில் பெண் தொழிலாளர்களின் கண்ணியமான பணிசூழல் குறித்து பேசினர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நல அலுவலர் ஜி நாகலட்சுமி, மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர்   எம் சிவகாந்தி,  பென்னாகரம் காவல் ஆய்வாளர் தொல்காப்பியன், உதவி காவல் ஆய்வாளர் போக்குவரத்து சரவணன், குழந்தைகள் நலக் குழுமம் தலைவர் டி.சரவணன், தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பின் மாவட்ட தலைவர் ஏ.சரவணன்,  தமிழ்நாடு பெண்கள் இணைப்புக் குழு மாவட்ட அமைப்பாளர் ரங்கநாயகி, ஜெயம் தொண்டு நிறுவன இயக்குனர் கென்னடி, எம் என் எஸ் எஸ் தொண்டு நிறுவன இயக்குனர் மகேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 நிகழ்ச்சியில்  இளம் சிறார் நீதி குழுமம் உறுப்பினர் வழக்கறிஞர் கே எஸ் ரவி, சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் ரவி ஆகியோர்கலந்தாய்வு கூட்டத்தில்  
சட்டம் சார்ந்த கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

 இறுதியில் விஐபி தொண்டு நிறுவனம்  சரளா செந்தில்குமார் அவர்கள் நன்றியுரை கூறினார்.

No comments:

Post a Comment