தமிழக முதல்வர் ஓகேனக்கல் வருகை குறித்து பென்னாகரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் துறை ரீதியான ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது.
இந்த கூட்டத்தில் பென்னாகரம் ஊராட்சி ஒன்றியம் மற்றும் ஏரியூர் ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெறும் அரசு திட்ட பணிகள் நிலை குறித்து இரு ஒன்றியங்களிலும் பணிபுரியும் அலுவலர்களிடம் அலுவலக விவரங்கள் கேட்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட மேற்பார்வை பொறியாளர் சீனிவாசன் நிர்வாக பொறியாளர் சங்கரன் உதவி நிர்வாக பொறியாளர் லோகநாதன் பென்னாகரம் ஒன்றியக் குழுத் தலைவர் கவிதா ராமகிருஷ்ணன், பென்னகர் வட்டாட்சியர் பாலமுருகன் பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெகதீசன் வடிவேல் ஏரியூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆறுமுகம் ஒன்றிய பொறுப்பாளர்கள் சீனிவாசன் சுரேஷ்குமார் மாலதி ஒன்றிய பணி மேற்பார்வையாளர் மலர்விழி சுரேஷ் மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment