அரூர் அருகே தம்பதியரை கட்டிப் போட்டு நகை, பணம் திருட்டு, அரூர் போலீஸார் விசாரனை.
அரூர் அருகே அச்சல்வாடி கிராமத்தைச் சேர்ந்த அண்ணாதுரை அவரது மனைவி சின்னபாப்பா வயதான இந்த தம்பதியினர். ஊருக்கு ஒதுக்குப்புறமாக தங்களுக்கு சொந்தமான வீட்டில் குடியிருந்து வருகின்றனர். நேற்று இரவு சுமார் 10 மணி அளவில் வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத 3 நபர்களில் ஒருவர் வீட்டின் வெளியே நின்று கொண்டார்.
இரண்டு நபர்கள் வீட்டினுள் நுழைந்த அண்ணாதுரை மற்றும் சின்னபாப்பா இருவரின் கை, கால்கலை கயிற்றால் கட்டி சின்னபாப்பாவை பாத்ரூமில் அடைத்து வைத்துவிட்டு, வீட்டில் இருந்த வெள்ளி குத்து விளக்கு உள்ளிட்ட பொருட்கள், ரூ.5000 சின்னப்பாப்பா கழுத்தில் இருந்த 5 பவுன் தங்கத் தாலி செயினை பறிக்கும் பொழுது அதிலிருந்த சில தங்க காசுகள் கீழே விழுந்தது அதை கவனிக்காமல் விட்டு சென்றனர். இதுகுறித்து அண்ணாதுரை கொடுத்த புகாரின் பேரில் அரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
No comments:
Post a Comment