சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெறவும், பெட்ரோல், டீசல் விலை உயர்வை தடுக்க தருமபுரி உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்பு குழு சார்பில் பி.எஸ்.என்.எல், அலுவலகம் அருகே முக்காடு போட்டு கும்மி அடித்தும் ஆர்ப்பாட்டம்.
மத்திய அரசு ஆட்சி பொறுப்பு ஏற்றதில் இருந்து ஏழை எளிய நடுத்தர மக்களின் வாழ்வாதாரங்கள் மீது அரசு அக்கறையற்ற போக்கினால் குடும்பப் பெண்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு இவ்வாண்டு ஜனவரி மாதத்தில் ரூ 594 ஆக இருந்தது. கடந்த 7 மாதங்களில் ரூ 250 க்கும் மேல் உயர்த்தப்பட்டு தற்போது ரூ1000 நெருங்கியுள்ளது. இநத விலை உயர்வால் பெண்கள் பலர் எரிவாயு சிலிண்டர் வாங்க முடியாமல் தடுமாறும் நிலை ஏற்பட்டுள்ளது. பலர் சிலிண்டர் வாங்க முடியாமல் விறகு அடுப்புக்கு மாறும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.
தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து உயர்ந்து வருவதால் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்து வருகிறது இதனால் நடுத்தர குடும்பத்தினர் பொருளாதாரத்தை கேள்விக்குறியாகியுள்ளது. மத்திய அரசு பி.ஜே.பி ஆளும் மாநிலங்களுக்கு அதிக அளவில் தடுப்பூசிகள் ஒதுக்குவதும். பி.ஜே.பி அல்லாத மற்ற மாநிலங்களுக்கு குறைந்த அளவு தடுப்பூசி ஒதுக்குவதால் நோய்தொற்று வேகமாகப் பரவி வருவதால் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் கொரோனா நோய்த்தொற்றால் தொழிலாளர்களையும் அவர்களது குடும்பத்தையும் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது.
பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. எனவே மத்திய அரசு உடனடியாக அனைத்தையும் திரும்பப் பெற வலியுறுத்தி இன்று உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் தருமபுரியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தருமபுரி பி.எஸ்.என்.எல் அலுவலகம் 50க்கும் மேற்பட்ட பெண்கள் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மாலை அணிவித்து முக்காடு போட்டு ஒப்பாரிவைத்தும் கும்மிஅடித்தும் நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
No comments:
Post a Comment