கட்சி தாவிய அமமுக நிர்வாகிகள். - TPVA 2021

Breaking

Blogroll

BANNER 728X90

Saturday, July 24, 2021

கட்சி தாவிய அமமுக நிர்வாகிகள்.

ஏரியூர் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து அம்மா மக்கள் முன்னேற்ற  கழகத்திலிருந்து முக்கிய நிர்வாகிகள் விலகி அதிமுக மாநில விவசாய பிரிவு  செயலாளர், தர்மபுரி மாவட்ட ஆவின் தலைவர் டி ஆர் அன்பழகன் முன்னிலையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.

 அமமுக எம்ஜிஆர் மன்ற மாவட்ட துணை செயலாளர் ஆர்கே அங்கமுத்து தலைமையில் அமமுக ஏரியூர் பகுதி நிர்வாகிகள் ஏரியூர் ஒன்றிய துணை செயலாளர் பொன்னுசாமி,மாவட்ட பிரதிநிதி கொழந்தைசாமி, விவசாய ஒன்றிய இணைச் செயலாளர் அழகரசன் ,ஊராட்சி செயலாளர் கபில்தேவ்,கிளை செயலாளர்கள் புது நாகமரை அர்ச்சுனன், ராம கொண்டஅள்ளி  சிவகுமார், சாமியார் கொட்டாய் ஜெயராமன், காணி காடு செந்தில்குமார், புதூர் சோளப் பாடி  கணேசன், நல்லூர் காடு,அன்பழகன், மற்றும் அரவிந்த்,கார்த்திக்ராஜா உள்ளிட்ட  20க்கும் மேற்பட்டோர்  அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.


பென்னாகரம் அடுத்த தாளப்பள்ளத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் அதிமுக மாநில விவசாய பிரிவு செயலாளர், தர்மபுரி மாவட்ட ஆவின் தலைவர் டி ஆர் அன்பழகன் கழகத்தில் இணைந்தவர்கள் அனைவருக்கும் கழகத் துண்டு அணிவித்து வரவேற்று பேசினார்.

அப்பொழுது கழக நிர்வாகிகள் ஏரியூர் ஒன்றிய கழக செயலாளர் தங்கராசு, பென்னாகரம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் அன்பு,ஏரியூர் ஒன்றிய குழு தலைவர் பழனிசாமி, முன்னாள் ஊராட்சி கழக செயலாளர் இ பி பெருமாள், சோளப் பாடி முன்னாள் கவுன்சிலர் செல்வம், முன்னாள் ஊராட்சி மன்ற துணை தலைவர் பேபி, ஏரியூர் ஒன்றிய சிறுபான்மை பிரிவு செயலாளர் ஜான் முத்து, மற்றும் சிடுவம்பட்டி அப்பாத்துரை,காமராஜ் பேட்டை மன்னன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment