இராமதாஸ்தண்டாவிற்கு நகர பேருந்து இயக்ககோரி மனு. - TPVA 2021

Breaking

Blogroll

BANNER 728X90

Sunday, July 25, 2021

இராமதாஸ்தண்டாவிற்கு நகர பேருந்து இயக்ககோரி மனு.

தருமபுரியில் இருந்து பாகல்பட்டி, முத்தம்பட்டி ஆஞ்சநேயர் கோயில், ஆலமரத்தூர், மஞ்சநாயக்கன் கொட்டாய், வழியாக இராமதாஸ் தண்டாவிற்கு புதிய வழி தடத்தில் நகர பேருந்து இயக்கிட கோரி தருமபுரி கிழக்கு மாவட்ட தி.மு.கழக செயலாளர் திரு.தடங்கம்.பெ.சுப்ரமணி Ex.MLA அவர்களிடம் பொதுமக்கள் மனு அளித்தனர். ராமதாஸ் தாண்டவிற்கு தொப்பூர் டு பொம்மிடி பேருந்துகள் இருந்தாலும் குறைந்த அளவே உள்ளது. அதுவும் கொரோனா காலகட்டத்திலிருந்து பேருந்து எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. மாலை 7 மணிக்கு மேல் பேருந்துகள் அதிகம் வருவதில்லை என்பது பொதுமக்களின் குற்றச்சாட்டு. முத்தம்பட்டி ஆஞ்சநேயர் கோவிலுக்கு வெளியூர் மற்றும் தர்மபுரியில் இருந்து பக்தர்கள் அதிகம் வருகின்றனர்.

ஆகையால் பாகல்பட்டி வழித் தடத்தில் இருந்து முத்தம்பட்டி அவ்வழியே ராமதாஸ் தாண்ட விற்கு பேருந்து சேவை வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். இந்த வழியே பேருந்து சேவையை ஏற்படுத்தினால் அப்பகுதி மக்களும் பயனடைவர். கோரிக்கையை போக்குவரத்து துறை கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதியளித்தார். இந்த நிகழ்வின் போது இராமதாஸ் தண்டா கிளை செயலாளர் மாதையன், ஊராட்சி மன்ற உறுப்பினர் கன்னிகவுண்டர், மாது, முருகேசன், வரதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment