தருமபுரியில் திரு.ஸ்டேன் சுவாமியின் அஸ்திக்கு அஞ்சலி. - TPVA 2021

Breaking

Blogroll

BANNER 728X90

Sunday, July 25, 2021

தருமபுரியில் திரு.ஸ்டேன் சுவாமியின் அஸ்திக்கு அஞ்சலி.

தருமபுரி மாவட்டம் திரு இருதய ஆண்டவர் புதிய பேராலய வளாகத்தில் மறைந்த திரு.ஸ்டேன் சாமியின் அஸ்திக்கு ஆயர் மேதகு முனைவர் செ.சிங்கராயன் மற்றும் தருமபுரி திமுக கிழக்கு மாவட்ட கழக பொறுப்பாளர் திரு.தடங்கம்.பெ.சுப்ரமணி Ex.MLA அவர்களும் தருமபுரி மாவட்ட சமூக நல்லிணக்க மேடை சார்பில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது

தருமபுரி திரு.இருதய ஆண்டவர் புதிய பேராலய வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த பழங்குடியின மக்களின் உரிமைப் போராளியும், மனித உரிமை செயற்பாட்டாளருமான மறைந்த திரு.ஸ்டேன் சுவாமியின் அஸ்திக்கு சேலம் மறைமாவட்ட மேனான் ஆயர் மேதகு முனைவர்  செ.சிங்கராயன் அவர்களின் தலைமையில் சிறப்பு அழைப்பாளராக தருமபுரி கிழக்கு மாவட்ட கழக பொறுப்பாளர் திரு.தடங்கம்.பெ.சுப்ரமணி Ex.MLA அவர்களும் தருமபுரி மாவட்ட சமூக நல்லிணக்க மேடை சார்பில் 200க்கும் மேற்பட்டோர் மரியாதை செலுத்தினர். 

ஜார்கண்டில் ஆதிவாசிகள் நிலங்களை பாதுகாக்கும் போராட்டத்தில் ஸ்டேன் சுவாமி தனது வாழ்க்கையை அர்பணித்தார். சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் ஸ்டேன் சுவாமி கடந்த 5.7.2021ல் உயிரிழந்தார். இதையடுத்து, திரு இருதய ஆண்டவர் புதிய பேராலய வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த ஸ்டேன் சுவாமியின் அஸ்திக்கு முதன்மை குரு பாதர் அருள்ராஜ், பொருளாளர் தந்தை சூசைராஜ், சமூக சேவை இயக்குனர் ஜேசுதாஸ், மெய்ப்பு நிலையம் இயக்குனர் மரி ஜோசப், பொ.மு நந்தன், சக்தி (எ)சமத்துவன், சிசுபாலன், ஆறுமுக பாண்டி மற்றும் இறைமக்கள் என 200-க்கும் மேற்பட்டோர் மலர்தூவியும் 20க்கும் மேற்பட்ட பாதிரியார்கள் மலர் தூவியும் இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் அனைவரும் மலர்தூவி இறை வணக்கம் செலுத்தினர்.

No comments:

Post a Comment