கர்நாடகத்தில் கனமழைஓசூர் கெலவரப்பள்ளி நீர்தேக்க அணைக்கு இரண்டாவது நாளாக நீர்வரத்து அதிகரிப்பு - TPVA 2021

Breaking

Blogroll

BANNER 728X90

Sunday, July 18, 2021

கர்நாடகத்தில் கனமழைஓசூர் கெலவரப்பள்ளி நீர்தேக்க அணைக்கு இரண்டாவது நாளாக நீர்வரத்து அதிகரிப்பு

*ஓசூர் கெலவரப்பள்ளி நீர்தேக்க அணைக்கு  இரண்டாவது நாளாக நீர்வரத்து அதிகரித்துள்ளது*

ஒசூர் அடுத்த கெலவரப்பள்ளி நீர்தேக்க அணைக்கு இரண்டாவது நாளாக நீர்வரத்து அதிகரிப்பு

தென்பெண்ணையாறு நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக ஒரே நாளில் 109 கன அடி உயர்ந்து கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து 696 கனஅடியாக அதிகரித்துள்ளது.

முழுக்கொள்ளளவான 44.28 அடிகளில் 38.38 அடிகள் இருப்பு வைக்கப்பட்டு அணையின் பாதுகாப்பு கருதி தென்பெண்ணை ஆற்றில் வினாடிக்கு 400 கனஅடி நீர்  வெளியேற்றப்பட்டு வருகிறது. 

இதனால் தென்பெண்ணை ஆற்று கரையோர விவசாயிகள் கிருஷ்ணகிரி மாவட்டம் திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

No comments:

Post a Comment