ஒசூரில் குளிரிலும் கொரோனா தடுப்பூசி செலுத்திகொள்வதற்கான டோக்கன்களை பெற ஸ்வெட்டர் மப்ளர் அணிந்து நீண்ட வரிசையில் காத்திருந்த பொதுமக்கள்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் பகுதிகளில் தொடர்ந்து இரண்டு நாட்கள் பெய்த மழையால் குளிர்ந்து காற்று வீசி குளிர்ச்சி நிலவி வருகிறது..
ஒசூர் சீதாராம் நகரில் உள்ள நகர்புற ஆரம்ப சுகாதார நிலையில் இன்று 500 நபர்களுக்கு கோவாக்சின் என்னும் தடுப்பூசி செலுத்தப்படும் அறிவிக்கப்பட்டிருந்தது.
காலை 7 மணிக்கு வழங்க கூடிய தடுப்பூசிக்கான டோக்கன்களை பெற ஆண்கள் பெண்கள் என 1000த்திற்கும் அதிகமானோர் குளிரை பொருட்படுத்தாமல்
ஸ்வெட்டர், மப்ளர், தலைப்பாகை அணிந்து நீண்ட தூரம் காத்திருந்து 500 நபர்கள் மட்டுமே தடுப்பூசி டோக்கனை பெற்று சென்றனர்..
குளிரிலும் கால்கடுக்க நின்ற பொதுமக்கள் தடுப்பூசி டோக்கன் கிடைக்காமல் பலர் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
ஓசூர் பகுதிகளில் சீதா ராம் நகர் இஎஸ்ஐ மருத்துவமனை ஓசூர் மருத்துவமனை உள்ளிட்ட 7 இடங்களில் 1350 கொரோனா தடுப்பு ஊசிகள் இன்று செலுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment