காவிரி நீர்பிடிப்பு பகுதியில் தொடர் மழை காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கர்நாடக அணைகள் அதிக அளவு நீர் வரத்தினால் அணைகள் வேகமாக நிரம்பி வருவதால் நீர் வெளியேற்றமும் அதிகரித்துள்ளனர்.
கிருஷ்ணராஜ சாகர் அணை:-
- மொத்த கொள்ளளவு 124.80 அடி
- தற்போதைய நீர் மட்டம் 98.20 அடி
- நீர்வரத்து 12916 கன அடி
- நீர் வெளியேற்றம் 2026 கன அடி
கபிணி அணை :-
- மொத்த கொள்ளளவு 84.00 அடி
- தற்போதைய நீர் மட்டம் 79.82 அடி
- நீர்வரத்து 11028 கன அடி
- நீர் வெளியேற்றம் வினாடிக்கு 13500 கன அடி
இன்று காலை நிலவரப்படி இரண்டு அணைகளில் இருந்தும் மொத்தமாக வெளியேற்றப்படும் நீரின் அளவு 15 ஆயிரத்து 526 கன அடியாக உள்ளது.
இதனை அடுத்து தமிழக எல்லையான பிலிகுண்டுலுவிற்க்கு இன்று காலை 15000 கன அடியாக இருந்த நீர் வரத்து தற்போதைய நிலவரப்படி வினாடிக்கு 16000 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. மேலும் தொடர்ந்து காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை அதிகரிக்கும் பட்சத்தில் ஒரு சில தினங்களில் காவிரி ஆற்றில் கூடுதலாக தண்ணீர் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment