உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் துறையின் கீழ் பெறப்பட்ட மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.
தமிழக முதல்-அமைச்சரின் சிறப்பு திட்டமான உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் துறையின் கீழ் தருமபுரி மாவட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடந்தது. இதில் அனைத்து துறை அதிகாரிகள் கலந்துகொண்டு தங்களது துறைகளில் பெறப்பட்ட மனுக்களின் பணி முன்னேற்றம் குறித்து விளக்கம் அளித்தனர். எந்தந்த துறையில் எவ்வளவு மனுக்கள் பெறப்பட்டது. இதில் எத்தனை மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்பது குறித்த விவரத்தை மாவட்ட ஆட்சியர் விவரமாக கேட்டறிந்தார்.
தருமபுரி மாவட்டத்தில் உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் துறையின்கீழ் பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இலவச வீட்டுமனை பட்டா, புதிய வீடுகள் வழங்குவது, குடிநீர் பிரச்சினை, சாலை வசதி, தெரு விளக்கு, போக்குவரத்து வசதி உள்ளிட்ட அடிப்படை தேவைகளை கேட்டு பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தொடர்ந்து சம்பந்தப்பட்ட பயனாளிகளுக்கு திட்டங்கள் சென்றடைய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த அனைத்து துறை அதிகாரிகளும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இந்த திட்டத்தின் கீழ் பெறப்படும் மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் கூறினார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மற்றும் கூடுதல் கலெக்டர் வைத்திநாதன், தர்மபுரி உதவி ஆட்சியர் சித்ரா விஜயன், சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை ஆட்சியர் சாந்தி, அரூர் உதவி ஆட்சியர் முத்தையன் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள், தாசில்தார்கள, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment