மீன் வளத்துறையில் வேலைவாய்ப்பு; விண்ணப்பிக்க அழைப்பு. - TPVA 2021

Breaking

Blogroll

BANNER 728X90

Tuesday, July 20, 2021

மீன் வளத்துறையில் வேலைவாய்ப்பு; விண்ணப்பிக்க அழைப்பு.


மீன்துறை உதவி இயக்குநர் தருமபுரி அவர்களின் கட்டுப்பாட்டில் காலியாக உள்ள ஒரு மீன்வள உதவியாளர் (Fishery Assistant) பணியிடத்தினை பின்வரும் தகுதி மற்றும் இனச்சுழற்சி முறையில் நிரப்பப்பட உள்ளது.

  1. தமிழ் எழுதப் படிக்க பேச தெரிந்திருக்க வேண்டும்.
  2. நீந்துதல், மீன்பிடித்தல், புதிய மீன்பிடி வலை பின்னுதல், பழுதடைந்த வலையினை செப்பணிடுதல், வீச்சு வலை வீசுதல் மற்றும் பரிசல் ஓட்டுதல் ஆகிய தொழில்நுட்பங்கள் தெரிந்திருக்க வேண்டும். மேலும் மீன்பண்ணை மற்றும் நீர்த்தேக்கங்களில் பகல் இரவு நேரங்களில் ரோந்துப்பணிகள் மேற்கொள்ள வேண்டும்.


இனசுழற்சியானது.

OC-G-PY என்ற முறையில் பின்பற்றப்படும். மேலும் 15900 - 50400 நிலை 2 என்ற சம்பள ஏற்றமுறையில் ஊதியம் வழங்கப்படும். வயது வரம்பை பொறுத்தமட்டில் 01.07.2021 அன்று உள்ளவாறு அனைத்து பிரிவினரும் 18 வயதுக்கு மேற்பட்டவராகவும், SC/ST பிரிவினருக்கு 35 வருடமும், BC/MBC பிரிவினருக்கு 32 வருடமும், (OC பிரிவினருக்கு 30 வயதிற்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். இனசுழற்சி முறையில் முன்னுரிமை பெற்றவர் இல்லாத பட்சத்தில் அதே இனச்சுழற்சி ஒதுக்கீட்டில் தகுதியான முன்னுரிமையற்றோர் விண்ணப்பதாரர்கள் தேர்வுக்கு எடுத்துக்கொள்ளப்படுவர்.


மேலும் மீன்வள உதவியாளர் பதவிக்கான விண்ணப்ப படிவத்தினை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் தருமபுரி அலுவலகத்தில் அலுவலக வேலை நாட்களில் பெற்று விண்ணப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது. விண்ணப்பதாரர்களின்

  1. கல்வி சான்றிதழ் நகல், 
  2. குடும்ப அட்டை நகல், 
  3. ஆதார் அட்டை நகல், 
  4. வயது நிருபண சான்றிதழ் நகல், 
  5. சாதி சான்றிதழ் நகல் மற்றும் இரண்டு 
  6. பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் 
கூடிய பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகம், 1/165 இராமசாமி கவுண்டர் தெரு, ஒட்டப்பட்டி, தருமபுரி 636705 (தொலைபேசி எண்: 04342-296623) என்ற முகவரிக்கு வருகின்ற 05.08.2021 அன்று பிற்பகல் 4.00 மணிக்குள் கிடைக்கத்தக்க வகையில் விண்ணப்ப உறையின் மேல் "தருமபுரி மாவட்ட மீன்வள உதவியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பித்தல்” என எழுதி நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்பிடல் வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி.இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment