தருமபுரி மாவட்டத்தில் இன்று (22.07.2021) நடைபெறும் கொரோனா தடுப்பூசி ஒதுக்கீடுகள் குறித்த அட்டவணையை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வெளியிட்டுள்ளார் , அதில் பின்வரும் முறையில் கோவிஷீல்டு தடுப்பூசிகள் செலுத்தப்படும்.
இந்த முகாமில் 18-44 வயது உள்ளவர்களுக்கு முதல் மட்டும் இரண்டாவது தவனையும் செலுத்தப்படும், இதில் 50% முதல் தவனையும், மீதம் உள்ள தடுப்பூசிகள் சிறப்பு வகைகளுக்கும், 2-ஆம் தவணையும் செலுத்தப்படும்.
தருமபுரி பகுதிக்கு 1710 தடுப்பூசிகளும், அரூர் பகுதியில் 1840 தடுப்பூசிகளும், காரிமங்கலம் பகுதிக்கு 1790 தடுப்பூசிகளும், மொரப்பூர் பகுதிக்கு 1890 தடுப்பூசிகளும், நல்லம்பள்ளி பகுதிக்கு 1650 தடுப்பூசிகளும், பாலக்கோடு பகுதிக்கு 1440 தடுப்பூசிகளும், பாப்பிரெட்டிப்பட்டி பகுதிக்கு 1600 தடுப்பூசிகளும், பென்னாகரம் பகுதிக்கு 1600 தடுப்பூசிகளும், அரசு கலை கல்லூரிக்கு 1200 தடுப்பூசிகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு, சிறப்பு முகாம்களுக்கு 500 தடுப்பூசிகளும் கர்ப்பிணிகள் மட்டும் பாலூட்டும் தாய்மார்களுக்கும் 1000 தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment