அரூர் தொகுதியில் தொழிற்சாலைகள் இல்லாததால், வெளிமாநில, மாவட்டங்களுக்கு கூலி வேலையை தேடி சென்று வரும் பொதுமக்கள், மற்றும் படித்த இளைஞர்களும் வேலை தேடி சென்று விடுகின்றனர். இந்தப் பகுதி பொதுமக்களின் பிரதான தொழில் விவசாயம். வானம் பார்த்த பூமியை ஆண்டுதோறும் விவசாய கிணற்று வைத்துள்ள விவசாயிகள் பலரும், மேட்டு விவசாய நிலத்தை மட்டுமே நம்பி ஏராளமான விவசாயிகளும் உள்ளனர். இதில் சில விவசாயிகள் விவசாய கிணறு மற்றும் விவசாய தேவைக்காக ஆழ்துளை கிணறு உள்ளவர்களும் உண்டு.
அரூர் சுற்றுவட்டார பகுதிகளில் மேட்டு நிலம் வைத்துள்ள விவசாயிகள் ஆரம்பம் முதலே திணை பயிர்களான ராகி, கம்பு, வரகு, சோளம், கொள்ளு, அவரை, தட்டபயிர் உள்ளிட்ட வகையான தானியங்களை அதிக அளவில் பயிரிட்டு வந்தனர். பருவநிலை மாற்றத்தால் மழை காலங்களில் சரிவர மழை பெய்யாததால் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக திணை பயிர்களின் விளைச்சல் தொடர்ந்து விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தி வந்தது. இதனால் வருத்தமடைந்த மேட்டு விவசாயிகள் சிலர் குறைந்த தண்ணீர் செலவு, மற்றும் குறைவான பராமரிப்பு செலவில் விளைச்சல் தரக்கூடிய மரவள்ளிக்கிழங்கு பயிரிடத் தொடங்கினர்.
தற்பொழுது அரூர் சுற்றுவட்டார பகுதியில் இந்த மாதத்தில் 125 மில்லி மீட்டர் மழையும், நடப்பாண்டில் 481 மில்லி மீட்டர் மழை பொழிந்து. மேலும் தொடர்ந்து மழை பொழிந்து வருவதால் மகிழ்ச்சியில் மேட்டு நில விவசாயிகள் தற்பொழுது சிலர் மாடு பூட்டியும், பலர் டிராக்டர் மூலம் உளவு செய்து அதிக அளவில் மரவள்ளிக்கிழங்கு பயிரிட்டு வருகின்றனர்.
மண் மணம் மாறாமல் முன்னோர்கள் வழிகாட்டுதலின்படி இன்றும் சித்தேரி, சிட்லிங், உள்ளிட்ட மலை கிராமப் பகுதிகளில் மேட்டு நிலம் விவசாயிகள் ராகி, கம்பு, வரகு, சோளம், அவரை, தட்டபயிர், கொள்ளு உள்ளிட்ட திணை பயிர் வகைகள் சாகுபடி செய்து வருகின்றனர்.கிணறு வைத்துள்ள விவசாயிகள். பலர் தொடர்ந்து மழை பொழியும் என்ற நம்பிக்கையில் தற்பொழுது விவசாயி கிணற்றில் இருக்கும் தண்ணீரில் நெல், மஞ்சள், வாழை, கடலை, பருத்தி உள்ளிட்டவை பயிரிடும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து விவசாயகள் கூறுகையில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக கொரோனா தொற்று ஊரடங்கு காலகட்டத்தில் வேலை தேடி வெளிமாநில, மாவட்டங்களுக்கு சொல்ல முடியாமல் வருமானம் இன்றி சிரமப்பட்டு வந்தோம். இந்த ஆண்டு பெய்து வரும் தொடர் மழையால் எங்களுக்கு சொந்தமான மேட்டு விவசாய நிலங்களில் பயிரிட்டு வருகிறேன். மேலும் அருகில் உள்ள விவசாய நிலங்களில் கூலி வேலைக்கும் சென்று வருகிறோம். இதனால் சற்று சிரமம் குறைந்து உள்ளது என தெரிவித்தனர்.
கிணறு உள்ள விவசாயிகள் கூறுகையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பெய்து வரும் தொடர்மழையால் விவசாயக் கிணறுகளில் தற்பொழுது உள்ள தண்ணீரை பயன்படுத்தி நெல், மஞ்சள், பருத்தி, பப்பாளி, மரவள்ளிக் கிழங்கு உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்து வருகிறோம். கடந்த ஆண்டு அதிக மழையால் நெல் விளைச்சல் பாதிப்படைந்தது. தற்பொழுது மரவள்ளிக்கிழங்கை, மாவு பூச்சி தாக்குதலால் விளைச்சலும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. வருத்தம் ஒருபுறம் இருந்தாலும் தற்பொழுது பேய்து வரும் தொடர் மழையை நம்பி மகிழ்ச்சியில் விவசாயம் செய்து வருகிறோம் என தெரிவித்தனர்.
No comments:
Post a Comment