மரவள்ளிக்கிழங்கு வெள்ளை பூச்சிகள் நோய் தாக்குதல்; உரிய இழப்பீடு கோரிக்கை. - TPVA 2021

Breaking

Blogroll

BANNER 728X90

Saturday, July 31, 2021

மரவள்ளிக்கிழங்கு வெள்ளை பூச்சிகள் நோய் தாக்குதல்; உரிய இழப்பீடு கோரிக்கை.

மரவள்ளி கிழங்கு விவசாயம் ஜனவரி மாத தொடக்கத்தில் நடவை செய்யப்பட்டும், தொடர்ந்து பராமரிப்பு செய்து விவசாயிகள் பாதுகாத்து வருகின்றனர். மரவள்ளிக் கிழங்கு  செடிகளின் இலைகள் வளர்ச்சியைப் பொறுத்தே  கிழங்குகள் உற்பத்தி அதிகரித்து  எடையும் கூடும். ஜூன், ஜூலை  மாதத்தில் மரவள்ளி கிழங்கு செடியின் அடி பாகத்தில் கிழங்கு ஊரும் தன்மையை அடையும். அக்டோபர் மாதம் முதல் அறுவடைக்குத் தயாராகும். இந்த நிலையில் இந்த ஆண்டு மரவள்ளிக்கிழங்கு செடிகளின் இலைகளை வெள்ளை மாவு பூச்சி, செம்பேன்  போன்றவையால் நோய்த் தாக்கம்  அதிகரித்து  மரவள்ளிக்கிழங்கு இலைகளை தாக்கப்பட்டு அதன் நிறம் உருமாறி பழுப்பு நிறமாக காட்சியளித்து  இலைகள் உதிர்ந்து மரவள்ளி கிழங்கு வளர்ச்சி பெறும் தன்மையை இழந்து விட்டது. 

இதுகுறித்து மூக்கனுர் அருகே உள்ள தின்னப்பட்டி பகுதியை சார்ந்த மரவள்ளி கிழங்கு விவசாயிகள் கூறுகையில் கடந்த ஆண்டு மரவள்ளி கிழங்கு  நன்கு விளைச்சல்  கொடுத்தது மூட்டை தொடக்கத்தில் ரூ. 350 முதல் இறுதியாக ரூ.500 வரை விற்பனை செய்யப்பட்டது. மரவள்ளிக்கிழங்கு விவசாய செடியை பராமரிக்க ஒரு ஏக்கருக்கு 20 ஆயிரம் வரை செலவாகிறது. இந்த ஆண்டு மாவு பூச்சி, செம்பேன் தாக்குதலால் மரவள்ளிக்கிழங்கு உருவாகும்  பருவத்தில் செடியின் இலைகள் பாதிப்படைந்து அதன் நிறம் உருமாறி கருகி கிழங்கு உற்பத்தியாகும்  தன்மையை இழந்துவிடுகிறது.


நோய் தாக்குதலை தடுப்பதற்காக  வேளாண்மை மருந்து கடைகளில் நோய் தாக்குதல் குறித்து எடுத்துரைத்த அவர்கள் ஒரு மருந்தை கொடுத்து இதை பயன்படுத்துங்கள் சரியாகிவிடும் என்று வாக்குறுதி கொடுத்த பிறகு அந்த மருந்தை வாங்கிச் சென்று பாதிக்கப்பட்ட மரவள்ளிக்கிழங்கு செடிகளுக்குக் பயன்படுத்திய பிறகும்   எந்த பலனும் இல்லை.

இதுபோன்ற பூச்சித் தாக்குதலைத் கட்டுப்படுத்த ஒட்டுண்ணி எனப்படும் பூச்சி வகை வேளாண் ஆராய்ச்சி மையங்களில் உள்ளது. அந்த வகையான பூச்சிகளை  பாதிக்கபட்ட மரவள்ளிக்கிழங்கு விவசாய பயிர்கள் செலுத்தினாள் மரவள்ளிக்கிழங்கு இலைகளை தாக்கும் பூச்சிகளை அந்த ஒட்டுண்ணி பூச்சிகள் அழிக்கும் தன்மை கொண்டது. வேளாண்மை துறை  மூலம் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை  ஆய்வு செய்து அதற்குத் தகுந்தாற்போல் நஷ்டஈடு வழங்க வேண்டும் என அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

No comments:

Post a Comment