மொரப்பூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து பெண் உயிரிழப்பு. - TPVA 2021

Breaking

Blogroll

BANNER 728X90

Saturday, July 31, 2021

மொரப்பூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து பெண் உயிரிழப்பு.

மொரப்பூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து 42 வயது பெண் உயிரிழப்பு.

இன்று மதியம் சுமார் ஒரு மணி அளவில் மொரப்பூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சென்னம்பட்டி கிராமத்தை சேர்ந்த சண்முகம் மனைவி சுமதி(42) என்பவர்  மாடுகளுக்கு  தனது சொந்த கிணற்றின் அருகே புல் அறுக்கும் பொழுது கிணற்றில் தவறி  விழுந்தார். உடனே அருகில் இருந்தோர் அரூர் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர். 


தீயணைப்பு துறையினர் வந்து கிணற்றில் இறங்கி  சுமதியை மீட்டனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்து காணப்பட்டதால் உடனே அவரை பிரேத பரிசோதனைக்கு அரூர் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். இந்த  சம்பவம் அருகில் இருந்தவர்களை வருத்தமடையச் செய்தது. இது எவ்வாறு நிகழ்ந்தது என்று மொரப்பூர் காவல்நிலைய  ஆய்வாளர் அவர்கள் விசாரணை செய்து வருகிறார்.

No comments:

Post a Comment