அரூர் பகுதி பயிறுவகை பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளின் வயல் நிலங்களை ஆய்வு செய்தார்.
அதுசமயம் தனது செய்திகுறிப்பில் துவரை செய்யும் விவசாயிகளுக்கு அரசு வழங்கும் மானியம் குறித்து கூறியதாவது.நடப்பாண்டில் தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் துவரை பயிரில் உற்பத்தியை பெறுக்குவதற்காக விவசாயிகளை ஊக்கப்படுத்த, 10 ஆண்டுகளுக்கு உள் வெளியிடப்பட்ட துவரை இரகங்களில், சான்று பெற்ற விதைகளை பயன்படுத்தி நடவு செய்யும் விவசாயிகளுக்கு தமிழக அரசு வேளாண்மை துறையின் மூலம் ஏக்கருக்கு 1000 வீதம் எக்டருக்கு ரூ.2500/மானியம் வழங்குகிறது.
அரூர் பகுதி துவரை சாகுபடியில் விருப்பமுள்ள விவசாயிகள் துவரை பயிரிரை வரிசைக்கு வரிசை 5 அடி மற்றும் செடிக்கு 3 அடி என்ற இடைவெளியில் மற்றும் ஊடுபயிர் சாகுபடி செய்யப்படகூடிய இடங்களில் 6-க்கு 3 அடி இடைவெளியிலும் வரிசை நடவு மேற்கொள்ள வேண்டும்.
துவரை சாகுபடியில் முக்கிய தொழில்நுட்பமாக நடவு செய்த 20 முதல் 30 நாட்கள் கழித்து 5 முதல் 6 செ.மீ அளவுள்ள நுனிகுறுத்ததை கிள்ளி விடுவதால் பக்க கிளைகள் அதிகரித்து கூடுதல் விளைச்சலை கிடைக்க வாய்ப்புள்ளது. மேலும் துவரை பூக்கத் தொடங்கும் பருவத்தில் 2 சதவித டிஏபி கரைசலை தெளிக்க வேண்டும் ஏக்கருக்கு டிஏபி 20 கிராம் ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். 15 நாட்கள் கழித்து மீண்டும் ஒருமுறை தெளிக்க வேண்டும். இதன் மூலமாக அதிக அளவில் திரட்சியான காய்கள் உருவாக மகசூல் அதிகரிக்கும் என்றார்.
இந்த அரசு மானியத்தை பெற தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலர்களை
1. அரூர் - திரு. ரமேஷ் - 7373117307
2. K. வேட்ரப்பட்டி - திரு. வினோத்குமார்-9585594002
3. H. கோபிநாதம்பட்டி - திரு. ஜெயக்குமார்-9786195760
4. கோட்டப்பட்டி - திரு. சிவன்-8012126706
5. தீர்த்தமலை - திரு. சிவன் - 8012126706
தொடர்பு கொண்டு பயனடைய அரூர் பகுதி விவசாயிகள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
No comments:
Post a Comment