சாலை வசதி கேட்டு சாலை மறியலில் ஈடுபட்ட கிராமத்தினர். - TPVA 2021

Breaking

Blogroll

BANNER 728X90

Tuesday, July 27, 2021

சாலை வசதி கேட்டு சாலை மறியலில் ஈடுபட்ட கிராமத்தினர்.

அரூர்-மாம்பாடி  சாலையில் கோணம்பட்டி கிராமத்தினர் சாலை வசதி கேட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அரூர் ஒன்றியம், எல்லைபுடியாம்பட்டி  பஞ்சாயத்துக்கு உட்பட்ட  கோணம்பட்டி கிராமத்தில்  65 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இக்கிராமத்திற்கு அரூர் -மாம்பாடி சாலையில் புறாக்கல்உட்டை பஸ் ஸ்டாப்பில் இருந்து சுமார் 1  கி,மீ. நடந்து செல்ல வேண்டும். பொதுமக்கள் நடந்து செல்லும் அந்த சாலை 2005-ஆம் ஆண்டு அறை கி.மீ வரை பஞ்சாயத்து நிர்வாகம் மூலம் தார் சாலை அமைக்கப்பட்டது. மீதமுள்ள அரை கிலோமீட்டர்  தார்ச்சாலை அமைக்கப்படாமல் உள்ளது.

மீதமுள்ள சாலைப் பகுதி சிலருக்கு சொந்தமான  பட்டாயத்தில் உள்ளது. அதனால் பஞ்சாயத்து நிர்வாகம் அந்தப் பகுதியில் சாலை போடாமல்  இன்று வரை உள்ளது. தற்பொழுது அந்த சாலை பகுதி அமைந்துள்ள நிலத்தின் உரிமையாளர்கள்  சாலையில் வாகனங்கள் மற்றும் கிராம மக்கள் நடந்து செல்வதற்கும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் .இது குறித்து கிராம பொதுமக்கள் தாசில்தார், கலெக்டர், முதல்வரின் தனிப்பிரிவு ஆகியோருக்கு  புகார் மனு அனுப்பியுள்ளனர். 


மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என ஆத்திரமடைந்த கிராமமக்கள் இற்று காலை 10:00 மணிக்கு அரூர்– மாம்பாடி  சாலையில், கோணம்பட்டி பஸ் ஸ்டாப்பில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அரூர் தாசில்தார் கனிமொழி சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி  தார்ச்சாலை அமைப்பது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி கொடுத்ததால் சாலை மறியல் கைவிடப்பட்டது இதனால் அந்தப் சாலையில் ஒன்றரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

No comments:

Post a Comment