40 ஆண்டு பழமையான கிணற்றை தூர்வாரி 3 ஆயிரம் மரக்கன்றுகளுக்கு தண்ணீா் விட்டு பராமரித்து வரும் அரசு பள்ளி மாணவர்கள்.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு ஒன்றியத்திற்க்குட்பட்டது பாடி ஊராட்சி.இந்த ஊராட்சியில் மூக்கம் பட்டி, பெரிய சவுளூர், சின்ன சவுளூர்,பாடி,கண்ணுகாரம்பட்டி,கவரன்கொட்டாய் உள்ளிட்ட ஆறு கிராமங்கள் உள்ளன.இதில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
இந்த மக்களின் முக்கிய தொழில் விவசாயம் ஆகும்.போதிய மழையில்லாத காரணத்தால் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விவசாயம் செய்ய முடியாமல் கூலிவேலைகளுக்காக பெங்களூரு, கோவை உள்ளிட்ட நகரங்களுக்கு கூலி வேலைக்கு சென்று விட்டனர். விவசாயத்தை பாதுகாக்க பாடி கிராமத்தில் கோவிந்தசாமி என்ற இளைஞா் கடந்த சில வருடங்களுக்கு முன்பு சுற்று சூழலை பாதுகாத்து விவசாயத்தை பெருக்க அரசு பள்ளி, கல்லூரி மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் என அனைவரையும் ஒன்றிணைந்து அக்கிராமத்தில் பீனிக்ஸ் குழு என்ற குழுவை உருவாக்கி ஏரிகளிலும், சாலையோரங்களில் மரக்கன்றுகள் நடும் பணியில் கடந்த ஏழாண்டுகளாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த மரகன்றுகளுக்கு நாள்தோறும் தண்ணீர் விலைக்கு வாங்கி ஊற்றி வளர்த்து வந்தனர்.
இதனால் சுமார் 3 ஆயிரம் மரக்கன்றுகள் நடபட்டு வளர்க்க பட்டு வருகிறது.ஆனால் போதிய அளவில் தண்ணீர் விலைக்கு வாங்கி ஊற்ற முடியாத காரணத்தினால், செடிகள் மரங்கள் தண்ணீா் இன்றி வாடியது. இந்நிலையில் ஏாியின் அருகே சுமார் 40 ஆண்டுகள் பழமையான,குப்பைகளை கொட்டி கிடந்த கிணற்றை பீனிக்ஸ் குழுவினா் மற்றும் சமூக ஆா்வலா்கள் பள்ளிமாணவர்கள் ஒண்றிணைந்து சமூக வலைத்தளங்களில் சோ் செய்து சுமாா் 2 லட்சம் பணம் கிடைத்தது. இதனை கொண்டு சுமார் 60 அடியாக தோண்டும் பணியில் ஈடுபட்டனர். தற்போது அதில் 20 அடிக்கு தண்ணீர் கிடைத்துள்ளது.
இதனை பயன்படுத்தி தற்போது அணைத்து மரக்கன்றுகளுக்கும் தண்ணீர் பாய்த்து வருகின்றனர். மேலும் வாரத்தில் மூன்று நாட்களுக்கு மரக்கன்றுகளுக்கு தண்ணீர் விடுவதும் மீதி நான்கு நாட்களுக்கு கிராமத்தில் பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் மக்களுக்கு வழங்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தண்ணீரை பயன்படுத்தி நர்சரி வளர்த்து காய்கறி தோட்டம் வைத்து பராமரிக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம் மக்களுக்கு நர்சரியில் கன்றுகள் வளர்த்து இலவசமாக அனைவருக்கும் வழங்க முயற்சி மேற்கொண்டு வருகிறோம்.என தொிவித்தனா்.
No comments:
Post a Comment