வேளாண் அதிகாரிகள் நீடித்த நிலையான கரும்பு சாகுபடி வயல் ஆய்வு தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டாரம், எர்ரன அள்ளி கிராமத்தில் வசிக்கும் அர்சுனன் த/பெ மாரியப்பகவுண்டர் அவர்கள் தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தில் கீழ் சொட்டு நீர் பாசனம் அமைத்து நீடித்த நிலையான கரும்பு சாகுபடி செய்த வயலை வேளாண் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
பாலக்கோடு வட்டாரத்தில் கரும்பு சாகுபடி பரப்பை அதிகரிக்கவும், கரும்பின் உற்பத்தி திறனை பெருக்கவும் மேலும் தருமபுரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் கரும்பு ஆலைகளுக்கு தேவைப்படும் கரும்பினை உரிய நேரத்தில் தேவையான அளவு கிடைக்கும் வகையில் நடப்பாண்டில் தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் நீடித்த நிலையான கரும்பு சாகுபடி செயல்விளக்கம் அமைப்பதன் முக்கியத்துவம் குறித்து வேளாண்மை துணை இயக்குநர் (உழவர் பயிற்சி நிலையம்) திரு.ஜெயபாலன் அவர்கள் விளக்கமளித்தார்.
பாலக்கோடு வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் திருமதி..B.S.சித்ரா அவர்கள் விவசாயிகள் தங்களிடம் இருக்கும் நீரினை சரியான முறையில் பயன்படுத்தி மகசூலை இரு மடங்கு ஆக்க பிரதமரின் விவசாய பாசனத் திட்டத்தின் கீழ் ஒரு துளி நீரில் அதிக பயிர் சாகுபடி செய்ய வேண்டும் நோக்கத்தோடு கரும்பில் சொட்டு நீர் அமைப்பதனால் பயிரின் வேர் பகுதியில் நீர் மற்றும் நீரில் கரையும் உரம் கிடைப்பதனால் 40 முதல் 70 விழுக்காடு வரை நீரை சேமிப்பதுடன் கூடுதலாக 20 முதல் 50 விழுக்காடு வரை மகசூல் பெறலாம் என்பதை அறிவுறுத்தினார்.
உதவி வேளாண்மை அலுவலர் திரு.முருகன் அவர்கள் நீடித்த நிலையான கரும்பு சாகுபடியில் ஒரு விதைப்பரு சீவல்களிலிருந்து நாற்றங்கால் அமைத்து 25-35 நாட்கள் வயதான நாற்றுகளை வரிசைக்கு வரிசை 5 அடி இடைவெளியும் நாற்றுக்கு நாற்று 2 அடி இடைவெளியும் இருக்குமாறு நடவு செய்ய வேண்டும்.
விதைப்பரு சீவல்களே (5000/ஏக்கர்) தேவைப்படுகிறது. மேலும் தண்ணீர் தேவையும் குறைவு. நீடித்த நிலையான கரும்பு சாகுபடி முறையில் விதை முளைப்புத்திறன், ஒரு பயிரிலிருந்து கிளைவிடும் முளைகளின் எண்ணிக்கை, ஊடுபயிர் பராமரிப்பிற்கான சாத்தயக்கூறுகள் அதிகம். சாதாரண முறையில் ஏக்கருக்கு ஒன்றுக்கு 40 டன் மகசூல் மட்டுமே கிடைக்கும் ஆனால் நீடித்த நிலையான கரும்பு சாகுபடியில் 60-80 டன் மகசூல் எடுக்க வாய்ப்பு உள்ளது என்று விளக்கமளித்தார்.

No comments:
Post a Comment