தருமபுாி அடுத்த அன்னசாகரத்தில் 50 கோடி மதிப்பிலான கோவில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து கிரய பத்திரம் செய்துள்ளவா்களிடமிருந்து அதை ரத்து செய்ய வேண்டும் என்றும் மீண்டும் கோவில் வசம் ஒப்படைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியாிடம் புகாா் மனு
தருமபுாி அடுத்த அன்னசாகரம் பகுதியில் புகழ்பெற்ற சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான சுமாா் 50 கோடி மதிப்பிலான 8.15 ஏக்கா் சொத்துக்களை தனிநபா்கள் ஆக்கிரமிப்பு செய்து கிரயம் செய்துள்ளதாகவும் 1959 ஆம் ஆண்டு முன்பு ஊா் பொியவா்களால் கோவிலுக்கு வழங்கப்பட்ட இடங்களில் வருட வாடகைக்கு விடப்பட்ட இடங்களில் வீடு கட்டி வசித்து வந்தனா். பங்குனி மாதம் நடைபெறும் தோ் திருவிழாவில் வருட வாடகை செலுத்தி செலவும் செய்து வந்தனா்.
இந்நிலையில் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு தனி நபா் பெயாில் பட்டா மாற்றம் செய்துள்ளதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது. கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் பட்டா செய்தவா்களிடமிருந்து மீட்டு கோவிலுக்கே வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மனு அளித்தனா். முன்னதாக கோபு என்பவா் கோவில் நிலத்தை அபகாித்ததாக கடந்த திங்கட்கிழமை மற்றொரு தரப்பினா் மனு அளித்தது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment