தருமபுரி மாவட்ட தொழில் மையத்தின் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் UYEGP.
தமிழக அரசு படித்த வேலையற்ற இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கும் நோக்கத்துடன் அவர்களின் சொந்த ஊரிலேயே குறு , சிறு உற்பத்தி மற்றும் சேவை நிறுவனங்கள் துவக்க வழியேற்படுத்தி கொடுப்பது வேலை வாய்ப்பிற்காக இடம் பெயர்தலை தவிர்ப்பது மற்றும் வறுமைக் கோட்டில் உள்ளவர்களின் வாழ்க்கைத்தரம் உயர வாய்ப்பு ஏற்படுத்தி தருவது ஆகியவற்றை நோக்கமாக கொண்ட ஒரு சிறப்பான திட்டமாகும்.
தருமபுரி மாவட்ட தொழில் மையத்தின் மூலம் இத்திட்டத்தின் கீழ் 2021-22 ஆம் ஆண்டிற்கென260 நபர்களுக்கு ரூ. 240.00 லட்சம் மானியம் வழங்க கடன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. திட்டத்தின் தன்மை உயர்த்தப்பட்ட திட்டமதிப்பீடு மற்றும் மானிய விவரம் :
நகர மற்றும் ஊரகப் பகுதிகள் ஆகிய மாவட்டத்தின் அனைத்து பகுதிகளில் உள்ள வேலைவாய்ப்பற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். ”உற்பத்தி தொழில்களுக்கு" அதிக பட்சம் ரூ.15 இலட்சமாகவும் , ”சேவை தொழில்களுக்கு” அதிக பட்சம் ரூ.5 இலட்சமும் , ”வியாபாரத் தொழில்” திட்டங்களுக்கு அதிகபட்சம் ரூ.5 இலட்சமும் வங்கிக் கடனாக வழங்கப்படுகிறது.
மானியத்தொகை திட்ட மதிப்பீட்டில் 25 விழுக்காடு அதிகபட்சம் அதிகபட்சம் ரூ.2.50 லட்சம் மானியமாக வழங்கப்படுகிறது. விவசாயம் மற்றும் விவசாயத்துடன் நேரடியான தொடர்புடைய இனங்களுக்கு இத்திட்டத்தின் கீழ் கடனுதவி பெற இயலாது.
தகுதியுடைமை:
18 வயது நிரம்பியவர்கள் பொது பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 35, சிறப்பு பிரிவினருக்கு அதிக பட்ச வயது வரம்பு 45 வயதும்.
கல்வி தகுதி:
குறைந்த பட்சம் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- குடும்ப வருமானம் - வருடத்திற்கு 5,00,000/-க்கு மேற்படாமல் இருத்தல் வேண்டும்.
- விண்ணப்பதாரரோ , அவர்களின் குடும்பத்தினரோ எந்த ஒரு வங்கியிலும் தவனை தவறிய கடன்தாரராக இருப்பின் இத்திட்டத்தின் கீழ் கடன் பெற தகுதியற்றவர்.
- மேலும் , ஏற்கனவே வேறு எந்த துறை மூலமாகவும் அரசு மானியத்துடன் கூடிய தொழில் கடன் திட்டத்தின் பயனாளிகளும் இத்திட்டத்தின் கீழ் கடன் பெற தகுதியற்றவர்.
தொழில் முனைவோரின் பங்களிப்பாக பொதுப் பிரிவினர் திட்ட முதலீட்டில் 10
விழுக்காடு தொகையினையும் , சிறப்புப் பிரிவினரான ஆதி திராவிடர், பழங்குடியினர், பின்தங்கிய வகுப்பினர், மிகவும் பின்தங்கிய வகுப்பினர் / சிறுபான்மையினர், பெண்கள், முன்னாள் இராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் ஆகியோர் திட்ட முதலீட்டில் 5 விழுக்காடு தொகையினையும் வங்கியில் செலுத்த வேண்டும்.
2021-2022 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலை
வாய்ப்பு உருவாக்கும் திட்ட விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன. தொழில் துவங்க ஆர்வமுள்ள தொழில் முனைவோர், இணையதளம் வாயிலாக கீழ்கண்ட இணைய முகவரியில் விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் அதில் இணைக்கப்பட வேண்டிய புகைப்படத்துடன் கூடிய ஆவண நகல்கள் அனைத்தும் இணைய தளத்தின் வாயிலாகவே www.msmeonline.tn.gov/in/uyegp வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.
கொரோனா தொற்று காரணத்தால் இத்திட்டத்தின் கீழ் வங்கிக்கடன் அனுமதிக்கப்பட்டவர்கள் கட்டாயமாக மேற்கொள்ள வேண்டிய தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தின் கீழான ஏழு நாட்கள் பயிற்சிக்கு செப்டம்பர் 2021-வரை விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
திட்டம் தொடர்பாக மேலும் தகவல் பெற பொது மேலாளர் , மாவட்டத் தொழில் மையம், சிட்கோ தொழிற்பேட்டை , சேலம் மெயின் ரோடு , தர்மபுரி - 636 705 அவர்களை அணுகவும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி.இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
தொலைபேசி எண்கள். : 04342 230892,8925533941 , 8925533942.

No comments:
Post a Comment