தருமபுரி மாவட்டம் ஏரியூர் அடுத்த கொட்டதண்டுகாடு பகுதியில் சாராயம் காய்ச்சி விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. பென்னகரம் போலீஸ் துணை சூப்பிரண்டு சௌந்தர்ராஜன் உத்தரவின்பேரில்ஏரியூர் இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி சப்-இன்ஸ்பெக்டர் வேலன், போலீஸார் பாபு உள்ளிட்ட தனிப்படை போலீசார் கொட்டத்தண்டுகாடு பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது மணி வயது 64 என்பவர் சாராயம் காய்ச்சுவது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அவரிடம் இருந்து 50 லிட்டர் முதல் 5 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட சாராயம் மற்றும் ஊழல் ஊற்றி அழிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் மணியை கைது செய்து சிறையில் அடைத்தனர்

No comments:
Post a Comment