செய்தியாளர்: ச. லித்தீஸ்வரன், தேன்கனிக்கோட்டை
தளி அருகே கொள்ளையடிக்க ரகசிய திட்டம் தீட்டிய 3 பேர் கைது மேலும் 2 பேருக்கு வலைவீச்சு கிருஷ்ணகிரி மாவட்டம் தளி காவல் ஆய்வாளர் சரவணன் உதவி காவல் ஆய்வாளர் மஞ்சுநாதன் மற்றும் போலீசார் ஒசபுரம் முனீஸ்வரன் கோவில் அருகில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு 5 பேர் கொண்ட கும்பல் அமர்ந்திருந்தனர்.
போலீசாரை கண்டதும் 2 பேர் தப்பி ஓடிய போது. 3 பேர் போலீசாரிடம் சிக்கினார்கள். அவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். அதில் அவர்கள் தளி ஜெயந்தி காலனியை சேர்ந்த லட்சுமிபதி என்கிற பதி (வயது 27), ஆசிக் (23), சங்கேப்பள்ளி திலிப் குமார் (25) என்று தெரிய வந்தது.
இவர்கள் ஏற்கனவே கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் என்றும் மேலும் அவர்கள் தளியில் கடந்த ஏப்ரல் மாதம் 12&ந் தேதி நரேஷ் என்பவரை வெட்டிக் கொலை செய்த வழக்கில் கைதானவர்கள் என தெரிய வந்தது. மேலும் தப்பி ஓடிய 2 பேரும் தளி ஜெயந்த் காலனியை சேர்ந்த அனில் என்கிற சுனில்குமார் (26), கர்நாடக மாநிலம் ஆனேக்கல் கவனஹோசஹள்ளியை சேர்ந்த கார்த்திக் (26) என தெரிய வந்தது.
பிடிபட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் அந்த பகுதியில் கொள்ளையடிக்க சதி திட்டம் தீட்டிக் கொண்டிருந்தது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து லட்சுமிபதி, ஆசிக், திலிப்குமார் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
கைதான 3 பேர் மீதும் தளியில் நரேஷ்பாபுவை கொலை செய்த வழக்கு நிலுவையில் உள்ளது. அதே போல தப்பி ஓடிய அனில் மீது தளியில் கொலை முயற்சி வழக்கும், கார்த்திக் மீது கொள்ளை வழக்கும் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
No comments:
Post a Comment