செய்தியாளர்: ச. லித்தீஸ்வரன். தேன்கனிக்கோட்டை
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தளி அடுத்த ஒட்டர்பாளையத்தை சேர்ந்தவர் கிருஷ்ணப்பா. இவரது மகன் சங்கரப்பா, 35. விவசாயியான இவரது வீட்டின் பின்புறம் நாட்டுத்துப்பாக்கி கிடப்பதாக கோட்டமடுகு கிராம நிர்வாக அலுவலர் வினோத்குமார் தளி போலீசாரிடம் புகார் செய்தார். விரைந்து சென்ற போலீசார் தீவிர விசாரணையில், விவசாயி சங்கருக்கு சொந்தமான துப்பாக்கி என்பது கண்டறியப்பட்டது. உரிமம் இல்லாத துப்பாக்கியை அவரிடமிருந்து பறிமுதல் செய்து அவரையும் கைது செய்தனர். தளி காவல் ஆய்வாளர் சரவணன் வழக்குப்பதிவு செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment