கடத்தூர் ஒன்றியம், இராமியம்பட்டி ஊராட்சியில் உள்ள பூதநத்தம் சாலை முதல் மேக்கல்நாய்க்கனஹள்ளி வரை உள்ள 2.80 கி.மீ. நீளமுள்ள சாலை ரூ.1.730 கோடி மதிப்பீட்டில் தற்பொழுது பிரதம மந்திரி கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின்கீழ் 13.01.2021 அன்று பணி துவக்கப்பட்டு தற்பொழுது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணியின் ஒப்பந்த காலம் ஒன்பது மாதங்கள் ஆகும். இச்சாலையில் ஐந்து சிறுபாலங்களம் தேவையான தடுப்பு சுவர்களும் தற்பொழுது கட்டி முடிக்கப்பட்டு சாலை மேம்பாட்டு பணிகள்
நடைபெற்று வருகிறது.
மேலும் இச்சாலை ஒட்டி நெடிகிலும் வனக்காப்புகாடு அமைந்துள்ளதால் வனத்துறை மற்றும் வருவாயத் துறை நில அளவை செய்யப்பட்டு மேம்பாட்டு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மேற்காணும் சாலைப்பணி 30.08.2021-க்குள் முழுவதும் முடிக்கப்பட்டு பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என கூடுதல் ஆட்சியர் /மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மரு.வைத்தியநாதன்,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment