தருமபுரி மாவட்டத்தில் வசிக்கும் (கிறித்துவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பராசீக மற்றும் ஜெயின்) ஆகிய சிறுபான்மையினர் இனத்தவர்க்கு தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களான தனி நபர் கடன் திட்டம் மற்றும் சுய உதவிக் குழுக்களான சிறு தொழில் கடன் திட்டம் ஆகிய திட்டங்களுக்கான கடன் வழங்கும் சிறப்பு முகாம் தருமபுரி மாவட்டத்தில் கீழ்க்கண்ட நாள்களில் நடைபெற உள்ளது.
S. No | லோன் மேளா நடைபெறும் வட்டம் | நாள் | கிழமை | நேரம் | இடம் |
1 | பாப்பிரெட்டிப்பட்டி | 26/07/2021 | திங்கள் | மாலை | வாசிகவுண்டர் தொடக்க |
2 | நல்லம்பள்ளி | 29/07/2021 | வியாழன் | மாலை | தருமபுரி மாவட்ட மத்திய |
3 | பென்னாகரம் | 05/08/2021 | வியாழன் | மாலை | தருமபுரி மாவட்ட மத்திய |
4 | பாலக்கோடு | 12/08/2021 | வியாழன் | மாலை | தருமபுரி மாவட்ட மத்திய |
5 | காரிமங்கலம் | 19/08/2021 | வியாழன் | மாலை 4/00 மணி | தருமபுரி மாவட்ட மத்திய |
6 | பாப்பிரெட்டிப்பட்டி | 26/08/2021 | வியாழன் | மாலை 4/00 மணி | தருமபுரி மாவட்ட மத்திய |
திட்டத்தின்கீழ் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் நபர் ஒருவருக்கு ரூ.50,000/- வீதம் மற்றும் தனிநபர் கடன் அதிகபட்சம் ரூ.20,00,000/- வரையிலும் கடனுதவி வழங்கப்படுகிறது.
கடனுதவி பெற குடும்ப ஆண்டு வருமானம் நகர்ப்புறமாயின் ரூ.1,20,000/- க்கு மிகாமலும், கிராமப்புறமாயின் ரூ.98,000/- க்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். இத்திட்டத்தில் தனிநபர் கடன் ஆண்டிற்கு (5 முதல் 8% வரை வட்டி விகிதத்திலும் கடன் வழங்கப்படுகிறது.
எனவே இம்மாவட்டத்தில் வசிக்கும் சிறுபான்மையினர்கள் மேற்படி சிறப்பு முகாம்களில் கலந்து கொண்டு கடன் விண்ணப்பங்களை பெற்று கீழ்கண்ட ஆவணங்களுடன் பூர்த்தி செய்து சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
1. சாதிச்சான்று நகல்,
2. வருமானச்சான்று நகல்
3. இருப்பிடச்சான்று நகல்
4. திட்ட அறிக்கை
5. வங்கி கோரும் இதர ஆவணங்கள்.
இச்சிறப்பு முகாம்களில் கலந்து கொண்டு அனைத்து சிறுபான்மையினர்களும் கடனுதவி பெற்று பயனடையுமாறு தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி.இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment