சூளகிரி செய்தியாளர் நாகராஜ்
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் பகுதி நேர ஆசிரியர்கள் ஒருங்கிணைப்பு ஆலோசனை குழு கூட்டம் நடைப்பெற்றது. இக்கூட்டத்திற்கு ஆசிரியர்கள் கருணாநிதி, இளங்கோவன், சிவபெருமாள், திராவிடன் ரமேஷ், மாதப்பன் ஆகியோர் கலந்து கொண்டு பணி நிரந்தரம் குறித்து ஆலோசனை வழங்கினர். நிகழ்ச்சியில் ஆசிரியர் சுரேஷ் வரவேற்று பேசினார்.நிகழ்ச்சியில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது
தீர்மானங்கள்
- கொரானா மற்றும் இயற்கையாக உயிர் நீத்த பகுதி நேர ஆசிரியர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
- கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க தலைவர் திரு.தியாகராஜன் அவர்களை பகுதி நேர ஆசிரியர்களின் ஒருங்கிணைப்பு குழு கெளரவ தலைவராக ஏற்று அவர் வழியில் செயல்படுவது எனவும்,
- கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விரைவில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க தலைவர் திரு.தியாகராஜன் தலைமையில் மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டம் நடத்த ஏற்பாடு செய்வது உள்ளிட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
முடிவில் ஆசிரியை ரத்னா நன்றி கூறினார்.
No comments:
Post a Comment