அனைத்து திருக்கோயில்களிலும் ஆடி வெள்ளி மற்றும் ஆடி அமாவாசை (08.08.2021 ஞாயிற்றுகிழமை) அன்று சுவாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி கிடையாது. - TPVA 2021

Breaking

Blogroll

BANNER 728X90

Thursday, August 5, 2021

அனைத்து திருக்கோயில்களிலும் ஆடி வெள்ளி மற்றும் ஆடி அமாவாசை (08.08.2021 ஞாயிற்றுகிழமை) அன்று சுவாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி கிடையாது.

தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து புராதான திருக்கோயில்கள் மற்றும் அனைத்து திருக்கோயில்களிலும் ஆடி வெள்ளி மற்றும் ஆடி அமாவாசை (08.08.2021 ஞாயிற்றுகிழமை) அன்று சுவாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி கிடையாது- மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி,இ.ஆ.ப., அவர்கள் தகவல்.

தமிழ்நாடு முழுவதும் கொரோனா நோய்த் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. ஊரடங்கு காலத்தில் திருக்கோயில்களில் நடைபெறும் ஐதீக முறைப்படியான பூஜை புனஸ்காரங்கள் கோயில் அலுவலர்களால் மட்டும் நடத்திக் கொள்ளவும், பொதுமக்களுக்கு சுவாமி தரிசனம் செய்வதற்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் தற்போது ஆடி வெள்ளி மற்றும் ஆடி அமாவாசையை முன்னிட்டு தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கோயில்களுக்கும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள், பக்தர்கள் அதிகளவில் சுவாமி தரிசனம் செய்வதற்கு வருகை புரிவார்கள் என எதிர்பாக்கப்படுகிறது. இதன் காரணமாக கொரோனா நோய் தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் நலன் கருதி தருமபுரி மாவட்டத்தில் உள்ள

  1. அருள்மிகு தீர்த்தகிரீஸ்வரர் திருக்கோயில், தீர்த்தமலை, அரூர் வட்டம்.
  2. அருள்மிகு காலபைரவர் திருக்கோயில், அதியமான்கோட்டை, நல்லம்பள்ளி வட்டம்,
  3. அருள்மிகு ஆஞ்சநேயர் திருக்கோயில், வே.முத்தம்பட்டி, நல்லம்பள்ளி வட்டம்.
  4. அருள்மிகு தேசநாதேஸ்வரசுவாமி திருக்கோயில், ஒகேனக்கல், பென்னாகரம் வட்டம்.
  5. அருள்மிகு சென்னியம்மன் திருக்கோயில், தா.அம்மாபேட்டை, அரூர் வட்டம்.
  6. அருள்மிகு முத்தித்தராயசுவாமி திருக்கோயில், நெருப்பூர், பென்னாகரம் வட்டம்.

ஆகிய திருக்கோயில்கள் மற்றும் அனைத்து புராதான திருக்கோயில்கள் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து திருக்கோயில்களிலும் ஆடி வெள்ளி மற்றும் ஆடி அமாவாசை (08.08.2021 ஞாயிற்றுகிழமை) அன்று சுவாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி கிடையாது. மேலும் கொரோனா நோய்த்தொற்று பரவலின் காரணமாக ஒகேனக்கல், காவேரி ஆற்றங்கரையில் மற்றும் தா.அம்மாபேட்டை ஆற்றங்கரையில் மக்கள் கூடி வழிபாடு செய்வதற்கும் அனுமதி இல்லை. மேலும், ஆகமவிதிப்படி சுவாமி அலங்காரங்கள், பூஜை புனஸ்காரங்கள் அர்ச்சர்கள், திருக்கோயில் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் மூலம் தொடர்ந்து நடைபெறும்.

இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment