விராசாத் (VIRASAT) மரபு உரிமை" - கைவினை கலைஞர்களுக்கான கடன் திட்டம்; ஆட்சியர் அறிவிப்பு. - TPVA 2021

Breaking

Blogroll

BANNER 728X90

Thursday, August 5, 2021

விராசாத் (VIRASAT) மரபு உரிமை" - கைவினை கலைஞர்களுக்கான கடன் திட்டம்; ஆட்சியர் அறிவிப்பு.

தருமபுரி மாவட்டத்தில் விராசாத் (VIRASAT) மரபு உரிமை" கடன் திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் கைவினை கலைஞர்கள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம் மற்றும் அனைத்து நகர கூட்டுறவு வங்கி கிளைகளில் விண்ணப்பித்து பயன்பெறலாம் .

மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி, இ.ஆ.ப., அவர்கள் தகவல் இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது :-

மரபு வழி கைவினை விளைப்பொருட்கள் தயாரிக்கும் கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் "விராசாத் (VIRASAT) மரபு உரிமை" என்ற கடன் திட்டம் தேசிய சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக்கழகத்தால் 2020-21 ஆம் ஆண்டிலிருந்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள சிறுபான்மையினத்தைச் சார்ந்தவர்களான முஸ்லீம், கிறித்தவர், ஜெயின், சீக்கியர், பார்சி, புத்தமதத்தைச் சார்ந்த மரபு வழி கைவினைக் கலைஞர்கள் தங்கள் தொழிலுக்கு தேவையான மூலதனப் பொருட்களை வாங்கி தங்களது தொழிலில் முன்னேற்றம் அடைந்திட உதவிடும் வகையில் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் கடனுதவி வழங்கப்படவுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் கடனுதவி பெற விரும்பும் சிறுபான்மையின கைவினைக் கலைஞர்களின் ஆண்டு வருமானம் கிராமப்புறத்தில் ரூ.98,000/-க்குள் மற்றும் நகர்ப்புறத்தில் ரூ.1,20,000/-க்குள் இருக்க வேண்டும். இத்திட்டத்தின் கீழ் அதிகபட்ச கடன் தொகை ரூ.10 இலட்சம் வழங்கப்படும். மேலும் இத்திட்டத்தின் கீழ் கடனுதவி பெறும் ஆண் பயனாளிகளுக்கு 5% மற்றும் பெண் பயனாளிகளுக்கு 4%, ஆண்டு வட்டி விகிதத்தில் கடனுதவி வழங்கப்படும். மேற்கண்ட திட்டத்தின் கீழ் பெறப்படும் கடனை 5 ஆண்டுகளுக்குள் திரும்ப செலுத்த வேண்டும்.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் கைவினை கலைஞர்கள் தருமபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம் மற்றும் அனைத்து நகர கூட்டுறவு வங்கி கிளைகளை அணுகி விண்ணப்பித்து பயன்பெறலாம் இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment