தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மரு. செந்தில்குமார் அவர்கள் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் அவர்களை சந்தித்து நெக்குந்தியில் இராணுவ ஆராய்ச்சி மையம் அமைக்க 850 ஏக்கர் நிலம் கையாகப்படுத்தப்பட்டுள்ள நிலையில் விரைவில் பணியை துவக்க கோரிக்கை வைத்தார்.
2010 ஆம் ஆண்டு தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த தாமரைச்செல்வன் அவர்களின் முயற்சியால், தருமபுரி தொகுதியில், பாதுகாப்பு, ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் அன்றைய மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் AK ஆண்டனி அவர்களால் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது, இராணுவ பாதுகாப்பு ஆராய்ச்சி மையம், அதன் ஆராய்ச்சி மையத்தை, 4,500 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்க இந்திய பாதுகாப்பு அமைச்சகம் கடந்த, 2010ம் ஆண்டு முடிவு செய்தது. அதற்காக தருமபுரி தொகுதியில் தகுதியான இடத்தை தமிழக அரசு கண்டறிந்து, பாதுகாப்பு அமைச்சகத்திடம் தெரிவித்துள்ளது.
அதன் அடிப்படையில், ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவன குழுவினர் கடந்த, 2010ம் ஆண்டு செப்டம்பர், 25ம் தேதி தருமபுரி அடுத்த நெக்குந்தி கிராமத்தில், நிலங்களை ஆய்வு செய்தனர்.இப்பகுதியில், அரசுக்கு சொந்தமான 817.56 ஏக்கர் நிலத்தையொட்டியுள்ள தனியாருக்கு சொந்தமான, 11.76 ஏக்கர் நிலத்தை பார்வையிட்டு, அந்த இடத்தில் மையம் அமைக்க முடிவு செய்தனர்.
இந்த மையத்தின் பணிகள் இன்னும் துவக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் தற்போதைய தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மரு. செந்தில்குமார் அவர்கள் தற்போதைய மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் அவர்களை அவரது அலுவலத்தில் சந்தித்து தருமபுரியில் அமையவுள்ள இரணுவ பாதுகாப்பு ஆராய்ச்சி மைய பணிகளை விரைந்து துவக்க கோரிக்கை வைத்துள்ளார். அப்போது மத்திய ராணுவ பாதுகாப்பு ஆராய்ச்சி மையத்தின் செயலாளர் Dr. சதீஷ் அவர்கள் உடனிருந்தார்.
No comments:
Post a Comment