பென்னாகரத்தில் பழங்குடி இருளர் இன மாணவர்களிடம் மாவட்ட கல்வி அலுவலர் பாலசுப்பிரமணிநேரில் ஆய்வு மேற்கொண்டார்
தமிழகம் முழுவதும் பள்ளி செல்லா குழந்தைகளை கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் ஒன்றியம் பண்ணப்பட்டி,போடூர் இருளர் காலனி உள்ளிட்ட இருளர் இன மக்கள் வசிக்கும் பகுதிகளில் பள்ளி செல்லா குழந்தைகள் பற்றிய கணக்கெடுப்பு பணியினை தர்மபுரிமாவட்ட கல்வி அலுவலர் பாலசுப்பிரமணியன் மேற்கொண்டார். குறிப்பாக இருளர் இன மக்கள் வசிக்கும் பகுதிகளில் இந்த கணக்கெடுப்பு பணி நடைபெற்றது.
இதில் முனிரத்தினம் வயது 9 என்ற மாணவியை நேரடியாக 4-ஆம் வகுப்பில் சேர்ந்தார். மேலும் இருளர் இன மக்களிடம் கல்வியின் அவசியம் பற்றியும் அரசின் சலுகைகள் குறித்து மாவட்ட கல்வி அலுவலர் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.இந்த ஆய்வு பணியில் மாவட்ட கல்வி அலுவலர் பயிற்சி திருநாவுக்கரசர் பள்ளி துணை ஆய்வாளர் இளமுருகன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மதுரைவீரன் கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் தமிழாசிரியர் முனியப்பன் வட்டார வள மைய மேற்பார்வையாளர் சரவணன் தலைமை ஆசிரியர் சாமிநாதன் ஆசிரியர் பயிற்றுனர் முருகேசன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment