வத்தல்மலைக்கு மினி பேருந்து இயக்க வலியுறுத்தி ஆர்பாட்டம். - TPVA 2021

Breaking

Blogroll

BANNER 728X90

Thursday, August 12, 2021

வத்தல்மலைக்கு மினி பேருந்து இயக்க வலியுறுத்தி ஆர்பாட்டம்.

வத்தல்மலைக்கு மினி பேருந்து இயக்க வலியுறுத்தி தமிழ் மாநில விவசாய தொழிலாளர்கள் சார்பில் தருமபுரி தாலுகா அலுவலகம் முன்பு ஆர்பாட்டம்.

ஆர்பாட்டத்திற்கு இச்சங்கத்தின் ஒன்றிய தலைவர் ஜி.ராஜகோபால் தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் பச்சாக்கவுண்டர்,மா வட்டக்குழு உறுப்பினர்கள் லட்சுமணன், ராஜமாணிக்கம், பச்சயப்பசாமியார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்டச் செயலாளர் ஜெ.பிரதாபன், மாவட்டத் தலைவர் ஜி.மாதையன், மாவட்ட துணைத் தலைவர் என்.முருகேசன், மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.பி.ராஜி ஆகியோர் கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினர்.

ஆர்பாட்டத்தில் தருமபுரி வட்டத்தில் அடுக்குமாடி வீடு கேட்டு விண்ணப்பம் செய்த அனைவருக்கும் வீடு ஒதுக்க வேண்டும்.ஏரி வேலை அட்டைபெற்றுள்ள அனைவருக்கும் வேலை வழங்கியும், வேலை நாட்களாக உயர்த்தி தினக்கூலி ரூ 600 வழங்க வேண்டும்.தருமபுரி-வத்தல்மலைக்கு மினி பேருந்து சேவையை மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதில், மாவட்டக்குழு உறுப்பினர்கள் கோவிந்தன், ரங்கன், மணி, அனுமந்தன், மூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் 

No comments:

Post a Comment