தருமபுரி மாவட்டம் மதுவிலக்கு அமல் பிரிவு காவல் ஆய்வாளர் திரு.பாரதிமோகன் அவர்களின் தலைமையில் கடந்த 05.08.2021-ம் தேதி அன்று போலீசார் மதுவிலக்கு தடுப்பு நடவடிக்கை சம்பந்தமாக நல்லானூர் கிராமம் மற்றும் கோணங்கிநாயக்கன அள்ளி கிராமத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது மேற்கண்ட இரு கிராமத்தை சேர்ந்த சிவலிங்கம் (41), சின்னமாது(51), ஆகிய இரு நபர்கள் கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்காக புதைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 100 லிட்டர் ஊறல்களை கண்டுபிடித்து விற்பனைக்கு வைத்திருந்த கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் இரு நபர்களின் மீதும் வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டது.
No comments:
Post a Comment