75-ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு தமிழக அளவில் கல்லூரி மாணவர்களுக்கான இணைய வழியில் பேச்சுப் போட்டி.
தருமபுரி மருதம் நெல்லி பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து நடத்தும் 75 ஆவது சுதந்திர தின வைர விழாவை முன்னிட்டு தமிழக அளவில் கல்லூரி மாணவர்களுக்கான மாபெரும் இணைய வழியில் நடைபெற உள்ளது. இதில் அணுகுண்டை அடைகாக்கும் வெண்புறா, என்று தணியும் இந்த சுதந்திர தாகம்,நான் விரும்பும் சுதந்திரம் என்ற மூன்று தலைப்புகளில் ஏதாவது ஒரு தலைப்பில் பேச வேண்டும்.
தமிழகத்திலுள்ள அனைத்து கல்லூரி மாணவர்களும் போட்டியில் பங்கேற்கலாம். போட்டி கூகுள் செயலில் நடைபெறும். போட்டியில் பங்கேற்கும் அனைத்து மாணவர்களுக்கும் பங்கேற்புச் சான்றிதழ் வழங்கப்படும். போட்டியில் வெற்றிப்பெறும் மாணவர்களுக்கு வெற்றிச் சான்றிதழும், நினைவுப் பரிசுகளும் நிகழ்வில் வழங்கப்படும். போட்டியில் பங்கேற்க விரும்புவோர் 9786088598,9345807987 ஆகிய எண்களில் முன்பதிவு செய்வது அவசியம். இவ்வாறு நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர், ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி உதவிப் பேராசிரியர் நா.நாகராஜ் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment