கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா ஊரடங்கு காலத்தில் கடந்த ஒரு வருடமாக அனுமதியின்றி கர்நாடக மாநில மதுபானங்கள் கடத்தப்பட்டது.
இந்த நிலையில் கொரோனா நேரத்தில் சூளகிரி பகுதிகளில் போலீசாரால் தீவிர ரோந்து மற்றும் சோதனைகளில் ஈடுப்பட்டனர். பின்னர் சூளகிரி போலிசாரால் ரூபாய் 10இலட்ச்சத்திற்க்கும் மேற்ப்பட்ட கர்நாடக மாநில மதுபாட்டில்கள் கைப்பற்றப்பட்டது. இந்த நிலையில் சூளகிரி தேசிய நெடுஞ்சாலை கொல்லப்பள்ளி வன பகுதியில் ஜேசிபி இயந்திரம் மூலம் அனைத்து மது பாட்டில்களும் அழிக்கப்பட்டது.
மேலும் சூளகிரி காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் ஓசூர் கோட்ட அலுவலர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் முன்னிலையில் ரூபாய் 10 இலட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் அழிக்கப்பட்டது.
No comments:
Post a Comment